பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் கமேரூன் கலந்து கொள்வது மிகவும் கண்டிக்கதக்கது – மைக் கேப்ஸ்

0
695

mike-gapesபிரித்தானியத் தமிழர் பேரவை உருப்பினர்களுடன் சந்தித்து பேசிய  பிரித்தானியாவின் தெற்கு இல்போட் க்கான தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மைக் கேப்ஸ் அவர்கள், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரூன் கலந்து கொள்வது மிகவும் கண்டிக்கதக்கது என கருத்து தெரிவித்துள்ளார். திரு.கேப்ஸ் பாராளுமன்ற வெளிநாட்டு விடயங்களுக்கான தேர்வுக்குழுவின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில நாடுகளின் அரசுத் தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் எமது பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பது கவலைக்குரியது எனவும், மனிதஉரிமைகள் தொடர்பாக ஒரு முன்னேற்ற நிலை இலங்கையில் ஏற்பட்டால் மட்டுமே கலந்து கொள்வேன் என்ற நிலையையாவது கடைப்பிடித்திருக்கலாம் என்றும் தனது ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டார்.

தமிழ் மக்களுக்கெதிராக இடம் பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க சுயாதீனமான சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று அவசியம் எனவும் அதற்காக தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.