பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்பதை தவிர்க்குமாறு அழுத்தம்

0
587

Chogm in sibபாராளுமன்ற உறுபினர்களை சந்தித்து பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்பதை தவிர்க்குமாறு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையினரின் போரட்டத்தின் தொடர்ச்சியாக மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆன சந்திப்பு நடைபெற்றது.

Carshalton & Walington தொகுதி, பா.உ. Tom Brake (Lib Dem ) உடனான சந்திப்பில், பிரதமர் கமரூனிடம் இந்த மாநாட்டை புறக்கணிக்குமாறு, தமது கட்சியின் சர்வதேச உறவுகளுக்கான பேச்சாளர் Martin Horwood மூலம், ஆளும் அரசின் வெளிவிவகார செயலாளர் William Hague க்கு அழுத்தம் கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.

தொழிற்கட்சியைச் சேர்ந்த, Mitcham & Morden பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh தனது சந்திப்பின் போது, இலங்கைக்கு செல்லும் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக , கமரூன் கேள்வி எழுப்புவார் என இந்த அரசாங்கம் சொன்னாலும், அதை தான் நம்பவில்லை எனவும், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம், இலங்கையை பிரித்தானியா அங்கீகரிப்பதாகவே தோன்றுகிறது எனவும், எது எப்பிடியிருப்பினும், இறுதிவரை தனது போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.

South Yorkshire, Rotherham பகுதி தமிழ் மக்களைச் சந்தித்த அத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Sarah Champion (Lab ), பிரித்தானிய மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிற்குமேயே, இலங்கையில் நடைபெறும் கொடூரங்களை பற்றிய ஒரு விழுப்புணர்வு அவசியம் எனவும் பிரதமர் கமரூன் இலங்கைக்கு செல்வது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதெனவும், உங்களது இந்தப் போராட்டத்திற்கு எனது நூறு வீத ஆதரவு உள்ளதெனவும் கூறினார்.