பொய் வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 02-11-2014 அன்று சென்னையில் தந்தை பெரியார் திராவிடர்கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பாக இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கடந்த 2011ம் ஆண்டு ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாட்வின் என்பவருக்கு சொந்தமான படகில் லாங்லட், பிரசாத், எமர்சன், அகஸ்டஸ், வில்சன் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் பிடித்து, படகில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

periyar-2014-2-11
இந்த வழக்கில் தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கும், இலங்கை மீனவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் அக்டோபர் 30,2014 மதியம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையின் இந்த செயலானது நம் தமிழக மீனவர்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இதனை எதிர்த்து இன்று 02-11-2014 காலை 11.00 மணிக்கு, பல்லாவரம் தொடர்வண்டி நிலயத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பாக இரயில் மறியல் போராட்டம் கழக துணைத் தலைவர் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி அவர்கள் தலைமையில், த.பெ.தி.க. சட்டத்துறை செயலாளர் வை.இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது.

த.பெ.தி.க. வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் இல.பாண்டியராசன், சென்னை மாவட்ட த.பெ.தி.க. செயலாளர் செ.குமரன், செ.விமல்ராஜ், தி.திவ்யராஜ், சைதை ராசு, த.பெ.தி.க.மகளிரணி அமைப்பாளர் கிரேசி விசயகுமார், த.பெ.தி.க. இணையதள பொறுப்பாளர் சோ.மதிவாணன், டெயிலெர் கண்ணன், துரைராசு, ராஜ்குமார், சுப்பிரமணி, குன்றத்தூர் ஒன்றிய தலைவர் விசயகுமார், அனகாபுத்தூர் பாலசுப்பிரமணியன், மணிமொழியான், நாகராசு, து.சுரேந்திரன், சிலம்பம் சிவாஜி, கி.கரிகாலன், ப.இராவணன், து.கார்த்திகேயன், ம.கோபி, பிரேமா, ரம்யா மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்த இரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள்.

நமது தோழர்கள், இலங்கை அரசு மற்றும் இந்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர், கொலைகாரன், போர்குற்றவாளி, கொடுங்கோலன் இராஜபக்சேவின் படத்தை தீயிட்டு கொளுத்தினார்கள்.

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேனிலைப்பள்ளியில் அடைத்து வைத்து மலை 6.00 மணிக்கு விடுதலை செய்தனர்.

இப்படிக்கு,
செய்திப்பிரிவு-தந்தை பெரியார் திராவிடர்கழகம்.
சென்னை மாவட்டம்.