பொலீவியா தனது அதிஉயர் மனிதநேய, சனநாயக விருதை இனப்படுகொலையாளி ராஜபக்சேவுக்கு வழங்கி இருப்பதை இப்போது தமிழர்கள் பரவலாக எதிர்ப்பதும், கவலை தெரிவிப்பதும் காண முடிகிறது.

பொலீவியாவின் செயலை எதிர்ப்பதும், புறக்கணிப்பதுமே சரியான எதிர்வினையாக இருக்கும் என்ற போதிலும், இன்றைய சூழ்நிலையில் அதை தாண்டிய நான்கு முக்கியமான வேலைகள் நம் கண்முன் நிற்கின்றன.

1. புலிகளின் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையினை ஆராய்ந்து, அதை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றும் முறைகளை நாம் அராய வேண்டும்.

புலிகளின் மீதான தடை நீக்கப்பெருதல் அனைத்திலும் முதன்மையான தேவை ஆகும். உலகெங்கிலும் விரைந்து செயல்பட முடியாமல் தேங்கி நிற்கும் பல உண்மை உணர்வாளர்களுக்கு கட்டுடைத்ததை போல ஆகும்.

ஐநா விசாரணை தொடங்க உள்ள இந்த நிலையில், மேலும் பலர் துணிவுடன் சாட்சிகளாக முன்வருவார்கள். இல்லாத போது இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய சட்டப்படியான தடையை கருதி தயங்க கூடும்.

2. வடக்கிலும் – கிழக்கிலும் ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இந்த நிலங்களின் மீதே / இந்த நிலங்களுக்காகவே பெரும்பாலான இனப்படுகொலை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலங்களை பிடுங்குவதென்பது சிங்கள மீனவர்கள், சாமானியர்கள், தொழில்முனைவோர் என்று பலராலும் திட்டமிடப்பட்டது. இப்போது உலகின் பார்வைக்கு அவற்றை அரச சொத்துக்களாக காட்டி பிற்காலத்தில் முற்று முழுதாக சிங்கள / பன்னாட்டு முதலாளிகள் வசம் விடப்படும்.

வளமை பொருந்திய இந்த கடற் பகுதிகள் சிங்கள குறியேற்றம் செய்யப்பட்டு இதன் Demography முழுதாக மாற்றப்படும். இதன் ஒரு பரஸ்பர பயனாக, நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பாக அங்கே மீதமிருக்க கூடிய மனித சாட்சிகள் மற்றும் பிற ஆதாரங்கள் (Human and Material Evidence) சிதைக்கப்பட்டு, மிக நிதானமாக, திருத்தமாக அந்த இடங்கள் “ஏதுமற்ற” இடங்களாக ஆக்கப்படும்.

பத்து தமிழ் குடும்பங்களை சுற்றி 100 சிங்கள குடும்பங்கள் குடி ஏற்றப்படும். இது ராணுவத்தை விளக்கும் தேவை வந்தாலும், தமிழர்கள் மீதான ஆளுமையை உறுதி செய்யும். இந்த நிலையில் அங்கே எந்தவித அரசியல் ரீதியான ஒழுங்கமைதலோ, போராட்டங்களோ துளியும் சாத்தியம் இல்லை. தமிழர் பகுதிகளில் நிலவும் மயான அமைதியை முன்னிறுத்தி உலகின் பல்வேறு போராட்டங்களை உள்நோக்கம் கொண்டதாம சித்தரிக்கவே இவை பயன்படும்.

அவ்வப்போது இலங்கைக்கு இன்ப சுற்றுலா சென்று விருந்துண்டு திரும்பும் இந்திய அதிகாரவர்க்கம்/அரசியல்வாதிகள், ராணுவத்தை பின்வாங்குவது தொடர்பாக வாய் திறப்பதே இல்லை. எதிர்காலத்தில் இதை நாமே அவர்கள் மீது கட்டாயமாக திணிக்க வேண்டும். இது இந்தியா இலங்கையிடம் கேட்கக்கூடிய குறைந்தபட்ச Tangible action என்கிற இடத்தில் நிறுத்த வேண்டும்.

3. ஐநா மனித உரிமை ஆணையத்தில் வாக்களிக்கும் தகுதி இல்லாத காரணத்தால் இதுவரை சீண்டப்படாது கிடந்த ஜோர்டான் நாட்டுக்கு ஆண்டு தொடக்கத்தில் ராஜபக்சே விசேட பயணம் மேற்கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

algusain
இந்த செப்டம்பர் மாதத்துடன் பதவி காலம் முடிவுறும் நவநீதம் பிள்ளை அவர்களின் இடத்தை அடுத்து நிரப்ப உள்ளது, ஜோர்டான் நாட்டின் இளவரசர் செய்யது அல்-ஹுசைன்.

இவரிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதை குறியாக கொண்டே இந்த அரசுமுறை பயணம் என்று உலகின் பல முன்னணி அறிஞர்கள் நம்புகின்றனர்.

இது மிகவும் முக்கியமான, கவலை தரும் செய்தி ஆகும். செய்யது அல்-ஹுசைன் மிக சிறந்த மனித உரிமை போராளி என்றாலும் வெளியுறவு கொள்கையில் தலையிடும் உயர்நிலை சக்திகள் அனைவருமே பன்னாட்டு அரசியலின் இயங்கியலுக்கு கட்டுபட்டவர்களாகவே இருப்பார்கள் என்பது 100% உண்மை.

ராஜாங்கரீதியான அழுத்தங்களின் மூலம் இளவரசர் செய்யீதின் வேலைகளை முடக்கவோ, அல்லது மென்மையாக்கவோ முயற்சிக்கும் இலங்கைக்கு எதிர் ந
டவடிக்கையை தமிழர் தரப்பு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பாரிய அளவிலான தமிழர் அமைப்புகள் இல்லாத நாடாக விளங்கும் ஜோர்டானில் தமிழர்களுக்கான கட்டமைப்பை விரைந்து உருவாக்க வேண்டும். ஏற்கனவே தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் தீவிர தமிழீழ ஆதரவு இயக்கமாக உள்ள SGPJ (Solidarity Group for Peace and Justice) போன்ற அமைப்புகளின் உதவியை இதற்கு நாடலாம்.

மிக விரைவாக தமிழர் தரப்பு நியாயங்களை, ஆதாரங்களை இளவரசர் செய்யீது அவர்களுக்கு தொகுத்து வழங்கி அவரது ஆதரவை பெறுவது தலையாய கடமை.

4. அடுத்து நம் முன்னர் உள்ள பெரும்பணி ஐநா விசாரணை தொடர்பில் ஆகும். விசாரணை எங்கு நடக்கும் என்பதே மிக முக்கிய கேள்வி.

நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் விசாரணை தள்ளி போகும் என்று இலங்கை எதிர்பார்த்து இருந்தது. ஆனால் நவநீதம் பிள்ளை அவர்கள் தனது பதவிக்கால முடிவை கருத்தில் கொண்டு மிக விரைவான நடவடிக்கைகள் மூலம் விசாரணைக்கு தேவையான நிதியை திரட்டிவிட்டார்.

sandra
இங்கிலாந்தின் Sandra Beidas ன் தலைமையில் விசாரணை குழுவும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த சாண்ட்ரா சூடானில் வரம்பு மீறிய விசாரணைகளை செய்ததாக கூறி வெளியேற்றப்பட்டவர் என்பது இவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

ஆனால் சூடான், சோமாலியா உட்பட உலகில் ஐநா விசாரணைக்கு உள்ளான எந்த நாடும் தனது பிரதேச எல்லைக்குள் விசாரணை ஆணையங்கள் அமைக்க ஒத்துழைத்ததில்லை. அதுபோலவே இலங்கையும் ஐநா குழுவை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் விசாரணை ஆணையம் அமைக்க அடுத்த சிறந்த இடம் தமிழகம்தான்.

ஆனால் இந்தியா இதற்கு ஒத்துழைக்காது. இலங்கையுடனான நல்லுறவை பேணுவதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கும். அப்படி நடக்கும்பட்சத்தில் தமிழர்கள் வெகுசன போராட்டம், அரசியல் Lobby, என்று அனைத்து வழிகளிலும் முயன்று இங்கு விசாரணை நடக்கவும், அதில் ஈழ போரின் அனைத்து வித சாட்சியங்களும் சுதந்திரமாக, பயமின்றி பங்கு கொள்ளவும் முனைய வேண்டும்.

ஈழ இனப்படுகொலையின் நேரடி சாட்சிகளின் கருத்துகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட இதுவே நமக்கு கிட்டும் கடைசி வாய்ப்பாக இருக்கலாம். எனவே முழு மூச்சாக நின்று விசாரணையை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும், அதில் அதிகபட்ச சாட்சியங்கள், ஆதாரங்கள் சமர்பிக்க போராட வேண்டும்.

இதற்கான முன்னோட்ட பணிகளை இப்போதே தொடங்கி, கருத்து பரப்பலை நாம் மேற்கொள்ள வேண்டும். மொத்தம் 10 மாதங்கள் நடைபெற உள்ள இந்த விசாரணையை தங்கள் நாட்டில் செய்ய இலங்கை நிராகரித்த பின்னர் வேறொரு இடத்தை தேடிப்பிடிக்கும் அவகாசம் இருக்க போவதில்லை. இந்தியாவை தயார்படுத்த இப்போதே நாம் தொடங்குவோம்.

பொலீவியா வழங்க உள்ள சனநாயக விருது என்பது உலக சனநாயகத்தையும், பொலீவியாவின் சனநாயகத்தையும் கேலிக்குரியதாக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அதிகபட்ச குற்றங்களும், மனித வள மேம்பாட்டு குறியீட்டில் 108 ஆவது இடத்திலும் உள்ள பொலீவியாவில் நிலவும் போதை பொருள் கலாச்சாரமும் இந்த விருது விலைக்கு வாங்கப்பட்டது என்றே நம்மை எண்ண வைக்கின்றது.

இந்த விருதை எதிர்க்கிற அதே நேரம் தமிழர்கள் மேற்கண்ட நான்கு அவசியமான, அவசரமான பணிகளில் இருந்து பெரிய மடைமாற்றத்தை செய்துவிட கூடாது என்பதை எச்சரிக்கையாக தமிழ் சமூகத்திற்கு தருகிறோம்.

நீதிக்கான தமிழரின் போராட்டம் நிச்சயம் வெல்லும். அதை நான் தான் உறுதிசெய்ய வேண்டும்.

தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!

நன்றி,

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

மேற்கோள்கள்:

1. http://colombogazette.com/2014/06/12/mr-to-get-bolivia-democracy-award/

2. http://www.newindianexpress.com/world/New-UNHRC-Chief-May-Act-Tough-on-Sri-Lanka/2014/06/08/article2269090.ece

3. http://www.aljazeera.com/news/asia/2014/06/un-inquiry-team-sri-lanka-war-crime-named-201461274338937707.html