எமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து – பல வெற்றிகள், இன்னல், துன்பங்களை அனுபவித்த உங்களை முன்னாள் போராளிகளேன கூறுவதற்கு மேலாக தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் என அழைப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

 

அன்பும, பாசம், மதிப்புக்குரிய, உடன்பிறவா சகோதர சகோதரிகளே

வணக்கம்!

 

முள்ளீவாய்கால் பேரழிவை தொடர்ந்து உங்களது விருப்பு வேறுப்புகளிற்கு மேலாக நீங்கள் பல பிரிவுகளா பிரிந்து நிற்பதையிட்டு மனம் வருந்துபவர்களில் நானும் ஒருவன். இதே நேரத்தில் உங்களிடையே பிரிவுகள் இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைபவர்களும் உள்ளார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 

சமாதான காலம் எனப்படும் 2002 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் உங்கள் எங்கள் முன்னேடிகளை ஒரு தடவை அல்லா பல தடவை கள் சந்திந்து நன்றாக உரையாடியுள்ளேன். என்னை பொறுத்தவரையில் உயிருக்கு மேலாக கொள்கையை மதிக்கிறேன். கொள்கை கட்டுபாடு பற்றி உங்களிற்கு என்னால் வகுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

 

2009ம் ஆண்டு மே மாதத்திலிருந்து நீங்கள் யாவரும் அனுப்பவிக்கும் கஸ்ட நஸ்டங்களை தினமும் அறிந்து கொண்டு தான் இருக்கிறோம். உண்மையை கூறுவதனால் என்னை போன்று நிதிப்பலம் அற்றவர்களினால் உங்கள் மீது அனுதாபம் கருணை கொள்வதற்கு மேலாக உங்கள் வாழ்க்கையை நிமிர்த்துவதற்கு என்ன தான் செய்ய முடியும்?

 

பணம் சொத்தை அபகரித்தவர்கள் உரியவர் வந்தால் காணக்கு கொடுப்பார்களாம் திருப்பி கொடுப்பார்களாம். நீங்கள் உரியவர்கள் இல்லையா? இவர்களிற்கு உங்கள் பணம் சொத்துக்களை யார் தாரை வார்த்து கொடுத்தார்கள்? புலம் பெயர் தேசத்தில் அன்று இறுமாப்புடன் நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்த போராட்டத்தின் தரகர்களே இவர்களிடம் இவ்வளவு பணத்தையும் சொத்துக்களையும் நம்பிக்கையின் பிரகாரம் கொடுத்தார்கள். உங்களது பணம் சொத்துக்களை அடாத்து தனமாக தமது சொத்தாக மாற்றியுள்ள இவர்கள் “தலைமை வந்தால் திருப்பி கொடுப்பார்களென” பொறுக்கிதனமாக ‘சென்ரிமென்ற்’ பேசுகிறார்கள். இவர்கள் ஒன்றை மட்டும் மறக்கப்படாது. சொத்து பணங்கள் பற்றிய சகல விளக்கமான விபரமான பட்டியல் ஏதோ ஒரு மூலையில் உள்ளது என்பதை. இவர்களிற்கு காலம் பதில் சொல்லும்.

 

நிற்கஇ கடந்த பாரளுமன்ற தேர்தல் நடந்த வேளையில் (20015ம் ஆண்டு யூலை மாதம் ஐனநாயக போராளிகளுக்கு ஓர் திறந்த மடல்) இன்று போல் அன்றும் ஓர் திறந்த மடலை உங்களிற்கு எழுதியிருந்தேன். நீங்கள் அவ்வேளையில் ஜனதிபதி ராஜபக்சாவின் மறைமுக கைபொம்மையாக திகழும் பணம் பதவி ஆசை கொண்ட ஊடகவியலாளர் எனப்படும்; ஒருவரினால் மிக தவறாக வழிகாட்டப்பட்டீர்கள் அன்று கூறிய ஆலோசனையை . நீங்கள் ஏற்று தேர்தலிருந்து வாபஸ் பெற்றிருந்தால் இன்று உங்கள் நிலை வேறாக திகழ்ந்திருக்கும்.

 

ஆனால் உங்கள் எதிர்காலத்தை சிதைப்பதையே அந்த ஊடகவியலாளர் எனப்படுபவர் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்ட காரணத்தினால் உங்களை பாதள குளிகளில் தள்ளி தமிழீழ விடுதலை புலிகளிற்கு வடக்கு கிழக்கு வாழ் மக்களிடையே எந்த ஆதரவு கிடையாது என்ற பெயரை பெற்று கொடுத்தார். நடந்ததையிட்டு மேலும் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை. இவற்றை ஓர் தற்காலிக பின்னடைவாக ஏற்றுக் கொண்டு முன்னேறலாம்.

 

இவை ஒரு புறமிருக்க தற்போதைய சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் கபடமான சிந்தனையை சுருக்கமாக உங்களிற்கு நினைவு படுத்துவதற்காக மீண்டும் ஓர் மடலை எழுதுவதை கடமையாக கொள்கிறேன். ஏற்கனவே சிறிலங்கா புலனாய்வினால் புலம்பெயர் தேசத்தில் குறி வைக்கப்பட்டவர்களில் ஒருவன் என்பதை நன்கு தெரிந்தாலும் எமது இனத்தின் காவலரணகிய விளங்கிய விளங்குகின்ற நீங்கள் யாருடைய சாவரிக்குள்ளும் அகப்படாது கௌரவமாக வாழ வேண்டும் என்பதே இவ் மடலின் நோக்கம்.

 

கடந்த மாதம் இடம்பெற்ற ஜெசுபிரான் உயிர்ஏழுந்த நாள் படுகொலைகளிற்கு புலனாய்விற்கு முன்கூட்டியே கிடைத்த தகவல்களை அறியாத சிறிலங்காவின் வேறுபட்ட பாதுகாப்பு பிரிவினர் உட்பட யாவரும் முதலில் சந்தேகம் கொண்டது உங்களை என்பதை நீங்கள் நிட்சயம் அறிந்திருப்பீர்கள்.

 

உயிர்ஏழுந்த நாள் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட சிலரை கைது செய்து விசாரணைகளிற்கு ஆக்கப்பட்டு தகவல்களை வடித்து எடுத்து சிறிலங்கா அரசினால் வெளியிடுவதற்கு இருபத்து நான்கு மணித்தியாலங்களிற்கு மேல் சென்றுள்ளது என்பதை முழு உலகமே அறியும். இதன் காரணிகளில் ஒன்று கொலையாளிகளுடன் தொடர்புபட்டுள்ள சில முக்கிய முஸ்லீம் சிங்கள அரசியல்வாதிகளை காப்பாற்றுவதையே சிங்கள பௌத்த அரசின் அக்கறையாக இருந்துள்ளது.

 

மேலும் கூறுவதனால் இலங்கைதீவை ஒர் முழுமையான சிங்கள பௌத்த நாடக மாற்றுவதற்கான இடையீறுகளை களைந்துஇ தமது குறிக்கோளில் வெற்றி காண்பதற்கு தமிழர்கள் முஸ்லீம்களை தமது திட்டங்களிற்கு ஏற்ற முறையில் பாவிக்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்தாகவுள்ளனர்.

 

இதன் காரணமாக சிங்பபூரிலிருந்து கொழும்பிற்கு வருகை தந்துள்ள பேராசிரியர் எனப்படுபவரின் அபிப்பிராயத்தை கவனத்தில் கொண்டு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன்னெடுப்பிற்கு அமைய முதற் கட்டமாக உங்களை இராணுவத்தினர் தற்பொழுது சந்தித்துள்ளனர். இது முதற் கட்டம் என்பதை தயவு செய்து மனதில் கொள்ளுங்கள்.

 

இந்த சிங்கபூர் பேராசிரியார் எனப்படுபவரை நீங்கள் தடுப்பிலிருந்த காலத்தில் சில வேளைகளில் கண்டிருக்கலாம் அல்லது உங்களிற்கு வகுப்பு நடத்தியிலிருக்கலாம். இந்த நபர்இ கருணா கே.பி. போன்றவர்களின் குத்துகரணத்தின் பிதா என்பதை அறிந்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

நாங்கள் யாவரும் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் பல தசாப்பதங்களாக பின்னிப்பிணைந்து வாழ்ந்த தமிழ் முஸ்லீம் மக்களை 1980ம் ஆண்டு பகுதிகளில் சிங்கள பௌத்த அரசியல் தலைவர்கள் தமது சுயநலத்தின் அடிப்படையில் – தமிழ் முஸ்லீம் மக்களை ‘பிரித்து ஆள’ ஆரம்பித்தனர். இதன் பலனாக தமிழ் முஸ்லீம் மக்களிடையே பல மோதல்கள் அழிவுகள் ஏற்பட்டது மட்டுமல்லாது மாறுபட்ட ஆட்சியாளர்கள் முஸ்லீம்களை தமது கைபொம்மையாக அதாவது தமது செல்லப்பிள்ளைகளாக பாவித்துஇ எமது தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பல இன்னல்கள் கஸ்டங்களை ஏற்படுத்தி இறுதியில் அழிவையும் ஏற்படுத்தினர். இவை யாவும் சரித்திரம்.

 

உயிர்ஏழுந்த நாள் படுகொலையின் பின்னர் சிங்கள பௌத்த அரசின் எண்ணம் என்னவெனில் மாறுபபட்ட சிங்கள பௌத்த அரசுகளினால் வளர்க்கப்பட்டு தற்பொழுது உருவம் பெற்றுள்ள தீவிரவாதத்தை – நன்றாக பயிற்றப்பட்டு தங்களிற்கு மேலான அனுபவம் கெட்டித்தனம் கொண்டுள்ள உங்களை – அதாவது தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகளை தாம் வளர்த்த தீவிரவாத்துடன் மோத வைப்பதற்கு திட்டம் வகுத்துள்ளனர்.

 

இவ் அடிப்படையில் இவர்கள் உங்களிடம் தமது முதலாவது அணுகுமுறையை தற்பொழுது ஆரம்பித்துள்ளனர். இவ் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் தமிழீழ மக்களை உண்மையாக விசுவாசமாக நடத்தாது 1948ம் ஆண்டு முதல் கபடமாக குறுக்கு வழிகளில் ஏமாற்றி வந்துள்ளனர் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 

தற்பொழுது ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் படங்களை பார்க்கும் பொழுது இலங்கைதீவை தற்பொழுது ஆட்டிபடைக்கும் தீவிரவாதம் என்பது முன்னைய இன்றைய ஆட்சியாளர்களினால் தமிழீழ மக்களிற்கு எதிராக வளர்க்கப்பட்டு தட்டி கொடுக்கப்பட்ட ஒன்று. இன்று இவர்களது வீட்டு வாசலுக்கு சர்ச்சைகள் வந்துள்ள காரணத்தினால் இவர்கள் உங்களுடன் தங்கள் படலத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போதைய நிலையில் இவர்களுடனான சவாரி என்பது எமது மிகுதி இருப்பபையும் கேள்வி குறி ஆக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

 

காலப்போக்கில் இவர்கள் உங்களிற்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து உங்களை தமது காவலரண்களாக மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

முதலாவதாகஇ உங்களிற்கு ஏதும் தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்களென ஆரம்பிப்பார்கள். அடுத்து நட்பாக பழகுங்கள் இணையுங்கள் என்பார்கள். இறுதியில் முன்னணியில் நிலைகொள்ள வைத்து உலகிற்கு வேடிக்கை காட்டுவார்கள்.

 

உங்களை வற்புறுத்தினால் கட்டாயப்படுத்தினால் ஒன்றுமே முடியாத கட்டமானால் சீட்டுவிளையாட்டில் உள்ள ‘புறக்கம்மாரீஸ்’ தத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள். அல்லது உதைபந்தாட்டாத்தில் உள்ள ‘சேம் சயிட் கோல்’ போடுங்கள். ஆனால் இவர்களை ஒருபொழுதும் தயவு செய்து நம்பாதீர்கள்.

 

சுருக்கமாக கூறுவதனால் சிங்கள பௌத்தாவதிகள் தமிழீழ மக்களிற்கு எந்தவித நன்மையையும் எந்த கட்டத்திலும் செய்யப்போவதில்லை. அவர்கள் எதை முன்னேடுத்தாலும் இலங்கைதீவை முழு சிங்கள பௌத்தமாயமாக்குவதையே மனதில் கொண்டு காய்களை நகர்த்துகின்றனர்.

 

இவர்கள் உண்மையானவர்களா இருந்தால் சிறைகளில் வாடும் உங்களது சகாக்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய முன்வரவேண்டும். இதேவேளை கணமல் போயுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் போராளிகளிற்கு என்ன நடந்தது என்பவற்றை வெளிப்படையாக பகிரங்கமாக கூறவேண்டும். அடுத்து ஜனதிபதியின் ஆதிகரங்களின் அடிப்படையில்; மீண்டும் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் பாரளுமன்றத்தில் உடன் நிறைவேற்ற வேண்டும்.

 

இவை எதையும் செய்வதற்கு தயாராக இல்லாத இவர்கள் உங்களிற்கு பூச்சாண்டி காட்ட ஆரம்பிப்பதில் சர்வதேச ஆளுத்தங்களிலிருந்து தப்புவதற்கான இன்னுமொரு காரணியும் உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

 

இவர்களது நேர்மையற்ற வரட்டு தனமான பிடிக்குள்ள நீங்கள் அகப்படாது ஒட்டுக் குழுக்கள் போல் சலுகைகளிற்காக ‘ஆமா’ போடும் பங்சோந்திகள் நீங்கள் அல்லாஇ நீங்கள் கொள்கை வாதிகள் என்பதை உலகிற்கு நிருபியுங்கள்.

 

மீண்டுமொரு திறந்த மடலில் சந்திக்கும் வரை.

அன்புடன்

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
02/05/2019