parani-3அறிவாயுதம் குழுவினரின் அணுசரனையடன் இன்று மாலை சென்னையில் நடந்த இனப்படுகொலை விழிப்பரங்கத்தில் பேசும்போதே பெண்ணிய உளவியலாளரும் இனஅழிப்பு மற்றும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை குறித்த பின் கற்கை ஆய்வாளருமான பரணி கிருஸ்ணரஜனி மெற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

 

அவர் தொடர்ந்து பேசுகையில்,

 

ஆரம்பம் தொட்டே இந்த மக்களின் போராளிகளின் மரணங்கள் தொடர்பாக நாம் சந்தேகம் எழுப்பியதும் ஒர் அனைத்துலக விசாரiணைய கோரியதும் ஏற்கப்பட்வில்லை என்பது மட்டுமலல் ஏளனத்திற்கும் உள்ளாகியது. பாலியல் வல்லுறவுக் குற்றஙகள் என்று நாம் வகைப்படுத்தியதும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் தற்போது எல்லோரும் இது குறித்து பேசுகிறார்கள்.

 

ஆனால் இப்போதும் தவறுதான் செய்கிறார்கள்.

 

போராடுவது தவறலல.. நீதிக்கான சரியான பொறிமுறையை வகுத்து கொண்டு கோரிக்கைகளை நாம் சரியாக முன்வைப்பது மிக முக்கியம். அதை விட முக்கியமானது பாதிக்ப்பட்ட போராளிகள், பெண்களிற்கான சமூக பண்பாட்டு உளவியல் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.

 

இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த பேராளிகளையும் மக்களையும் காக்கும் விச ஊசி விவகாரத்தையும் தாண்டி நாம் பேச வேண்டிய புள்ளிகள் இருக்கின்றன.

 

வன்னி இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த மக்களுக்கு இனஅழிப்பு அரசு திட்டமிட்ட இனஅழிப்பு நோக்கில் அவர்களுக்கு எந்த பிரத்தியேக சிகிச்சையும் செய்யவில்லை.

 

ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனஅழிப்பின் மிக நுட்பமான உத்தியாகவே இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

இது உண்மையான நல்லிணக்கத்தை பேணாத இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம். இதைத்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்றும் வரையறுக்கிறோம்.

 

அதுதான் கடந்த ஏழு வருடங்களாக தமிழர் தரப்பு நடந்த இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையை கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் போராளிகளுக்கு மட்டுமல்ல இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த அனைத்து மக்களுக்கும் சேர்த்து முழுமையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

 

குறிப்பாக உளவியல் ஆற்றுப்படுத்துகை. உளவள ஆலோசனை என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாம்களில் வைத்து எமது போராளிகளினதும் மக்களினதும் உளவியல் இனஅழிப்பு நோக்கில் ஊனப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

மே18 இற்கு பிறகு இன அழிப்பு அரசு “புனர்வாழ்வு முகாம்கள்” என்ற பெயரில் நடத்திய இனஅழிப்பு வதை முகாம்களில் வைத்து நடத்திய “உளவளத்துணை ஆலோசனைகள்” (counselling குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம்.

 

parani-2அது உளவளத்துணை ஆலோசனை என்ற பெயரில் நடத்தப்பட்ட மிக மோசமான வன்முறையும் அப்பட்டமான மூளைச்சலவையுமாகும் ( Brain wash)..

 

இது எமது போராளிகளின் உளவியலை எப்படி ஊனமாக்கும் என்பதை நாம் விரிவாக வேறு விளக்க வேண்டுமா?

 

அத்துடன் இறுதி இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியுள்ள மக்களின் உளவியலும் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது.

 

அவர்களது உளவியல் ஊனப்படுத்தப்பட்டு குருரமாகச் சிதைக்கப்பட்டு சமூகத்திற்குள் நடமாட விடுவதன் ஊடாக இனஅழிப்பின் அடுத்த கட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது இனஅழிப்பு அரசு.

 

விளைவாக சமூகத்தில் புதிய அடையாளங்களுடன் பேதலித்த உளவியலுடன் உலாவரும் போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகிறது.

 

விளைவாக தமது ஊனப்பட்ட உளவியலை இருதரப்பும் விரித்தும் பிரித்தும் வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.

 

முடிவாக வசைபாடல்களும் பறக்கணிப்பும் பல்வேறு வடிவங்களாக வெளித்தளப்படுகின்றன. இதை இனஅழிப்பு அரசும் அதன் அடிவருடிகளும் அறுவடை செய்கிறார்கள்.

 

ஒரு இனத்தை திட்டமிட்டு உளவியல்ரீதியாகச் சிதைப்பது இனஅழிப்பு நோக்கங்களை கொண்டது என்று அனைத்துலக இனஅழிப்பு சட்ட வரைபுகள் வலியுறுத்துகின்றன.

 

ஏன் ஒரு உன்னதமான போராட்டத்தை நடத்திய போராளிகள் இன்று குடும்ப பிணக்குகளிற்குள் சிக்கவும் அதை விரிக்கவம் வளர்க்கவும் செய்து தமது குழந்தைகளையும் அனாதைகளாக்கி தமது வாழ்வையும் தனிமைப்படுத்த நேரிடுகிறது.?

 

இது தனிமனிதர்களாக அவர்களைப் பாதிக்கிறதென்பதற்கப்பால் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிராக பேராடி தன்னை நிறுவ முற்பட்டுகொண்டிருக்கும் ஒரு இனத்தை மோசமாகப் பாதிக்கிறது என்பதுதான் இதன் வெளிப்படை உண்மை.

 

உங்களில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பொது மக்களை விடுவோம். மே 18 இற்கு பிறகு உயிர் பிழைத்து தப்பி வந்த பல போராளிகள் குடும்பங்கள் மேற்படி உளவியற் சிக்கல்களுக்குள் தள்ளப்பட்டு குடும்ப பிணக்குகளினால் பரஸ்பரம் நம்பிக்கயற்று பிரிந்திருக்கிறார்கள் இதன் புள்ளிவிபர கணக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது.

 

parani1இது மேலும் எமது பெண்களை தனிமைப்படுத்தவும் எமது குடிப்பரம்பலை தடுக்கவுமே வழி செய்கிறது.
அதுதான் நாம் உடனடியாக தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த ஒவ்வொருத்தருக்கும் உளவியல் ஆற்றுப்படுத்துகை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம்.
எனவே விச ஊசி விவகாரம் மட்டுமல்ல இறுதி இனஅழிப்பில் பாவிக்கப்பட்ட இராசயான ஆயுதங்களின் பாவனையால் பாதிக்கப்பட்ட மக்களின் நோய் தொற்றுக்கள் உட்பட திட்டமிட்ட இனஅழிப்பு நோக்கில் ஊனப்படுத்தப்பட்ட எமது மக்களின் – போராளிகளின் உளவியல் ஆற்றுப்படுத்துகை கூட அனைத்துலக மருத்துவ விசாரணைக்குழு ஒன்றின்: கண்காணிப்பில் சீர் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இங்கு அதிமுக்கியமாகிறது..

 

எனவே எதையும் ஒற்றையாகவும் தட்டையாகவும் அணுகும் நடைமுறைப் போக்கை நாம் சரி செய்ய வேண்டும்.

 

என்று குறிப்பிட்டார்.

 

அவரது முழுமையான உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/gaCN9f97s74