இரண்டாயிரத்து ஒன்பது வன்னியின் யுத்தம் வெள்ளாம் முள்ளிவாய்க்காலை நெருங்கிய வேளை இவர்களது வீடு அனைவரரையும் அரவணைத்தது.

முள்ளிவாய்க்காலின் கடைசி வீடு. இன்று யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி கூரையிழந்து நிற்கிறது. மீள் குடியேறி சிறுகுடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர் இந்த வயோதிபப் பெற்றோர். சற்குணசிங்கம் சிவலோகநாயகி தம்பதியினருக்கு 3 பிள்ளைகள். மூத்தமகன் வீட்டைப் பிரிந்து பல ஆண்டுகள். இளையமகள் திருமணமாகி யாழ்ப்பாணத்தில் 2 பெண் பிள்ளைகளுடன் வாழ்கிறார்.

Sivaloganayagi
இவர்களது 2 வது மகன் செவ்வேள் சந்நிதி முருகனை நேர்ந்து பெற்றபிள்ளை காணாமற் போய் 5 ஆண்டுகள் கடந்து விட்டது. தாய் மகனைத் தேடி செல்லாத இடம் இல்லை. நடக்காத தூரம் இல்லை. சனதாதிபதி ஆணைக்குழுவிடம் நம்பிக்கையுடன் தான் முறையிட்டார். தனது மகன் திரும்பி வருவான் என்ற தாயின் நம்பிக்கைக்கு முன்னால் நாம் வார்த்தைகளில் தோற்றுப் போய்விடுவோம்.

செவ்வேளின் தந்தை வயதாகி வீட்டிலேயே இருக்கிறார். சிவலோகநாயகி நிறுவனம் ஒன்று வழங்கிய தையல் இயந்திரம் மூலம் உடைகளைத் தைத்து விற்று வாழ்க்கைகையக் கொண்டு சென்றார். இன்று நோய்வாய்ப் பட்டுள்ளார். இதனால் தையல் செய்ய முடியாத நிலையில் கோழிகளை வளர்த்து வாழ்வை கொண்டு செல்லலாம் என்று முயன்றார். அதுவும் முடியாமல் போய்விட்டது.

Sivaloganayagi-home
வவுனியா உளநல மருத்தவப் பிரிவு இந்தத் தாய்க்கு பல சந்தர்ப்பங்களில் உதவியுள்ளது.

தம்முடைய காலம் நெருங்குவதாக இந்தத் தாய் உணர்கிறார். தாம் இருக்கும் காணியை சமூகநோக்குள்ள நல்ல உள்ளங்களிடம் கையளிக்க விரும்பியுள்ளார். இந்தத் தாயும் தந்தையும் வாழ்வதற்கு மாதாந்தம் சிறு உதவியாக ரூ.3000 நல்லுள்ளங்கள் வழங்க முன்வந்தால் அது போற்றுதற்குரியது.

தொலைபேசி இல. – 0775364944
வங்கியன் பெயர் – இலங்கை வங்கி முல்லைத் தீவு
கணக்கு இலக்கம் – 74453783
கணக்கின் பெயர் – சற்ணசிங்கம் சிவலோக நாயகி
19.08.2014