திங்கட்கிழமை 10-ஆம் திகதி இலண்டன் மல்பரோ-ஹவுசில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள உள்ளதாகவும் அவரது பிரயாண ஏற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.

53 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறித்த மாநாட்டில் இலங்கை அதிபர் பங்கு கொள்ளும் பட்சத்தில் மாநாடு நடைபெற உள்ள லண்டன் மல்பரோ – ஹவுசின் முன்னிலையில் தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான தமிழர்களின் கண்டனக் குரலை எழுப்புவதற்கு அனைவரையும் தயாராகுமாறு பிரித்தானியர் தமிழர் பேரவை அறிவிப்பு விடுத்துள்ளது. இலங்கை அதிபரின் விஜயம் குறித்த தகவல் உறுதிப்பட கிடைக்கப் பெற்றவுடன் அனைவருக்கும் உடனடியாக அறியத் தரப்படும்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ இதனைப் புறக்கணித்துவிட்டு,அமைச்சர் ஜீ.எல் பீரிசை லண்டனுக்கு அனுப்பிவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் மகிந்தர் லண்டன் வந்தாலும் வராவிட்டாலும், இலங்கையை எதிர்த்து தமிழர்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையினர் (BTF) சற்று முன் அறிவித்துள்ளார்கள்.

நாளையதினம் (திங்கள் 10/03/14 ) மாலை 4.00 மணிமுதல் பாரிய போராட்டம் பல்மோரல் மாளிகைக்கு முன்னதாக நடைபெறும் என்று அறியப்படுகிறது.

காமன்வெலத் நாடுகளின் கூட்டம் பல்மோரல் மாளிகையில் தான் நடைபெறுகிறது. எனவே அதற்கு முன்னதாக பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவையினர் பொலிசாரிடம் அனுமதியைப் பெற்றுள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

Commonwealth Secretariat
Malborough House
London
SW1Y 5 HX

at 4pm on Monday

Nearest tube Charring Cross