“மகிந்தாவின் இன அழிப்பு செயல்களை ஜநாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து பல தடவை பார்த்து வருகின்றோம். இப்பொது வேட்பாளர் மைத்திரியை பற்றிய அவருடைய செயல்களையும், கொள்கைகளையும் ஒப்பிடும் போது மகிந்தவிட வித்தியாசமானவராக காணப்படவில்லை” என ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

1. 2009 கடைசி இரண்டு கிழமையும் முள்ளிவாக்கால் அழிவுக்கு மைத்திரி பாதுகாப்பு மந்திரியாக இருந்து செயற்பட்டுள்ளார். மகிந்தா மே3 இருந்து மே 17 (2009) அளவில் வெளிநாடு சென்றிருந்ததால் மைத்திரி மகிந்தாவின் பாதுகாப்பு மந்திரி பதவியினை பொறுப்பெடுத்து இன அழிப்பை அதிக அளவிற்கு கொண்டு சென்றார். இவரின் பொறுப்பில்தான் இசைப்பிரியா, பாலச்சந்திரன், புலித்தேவன் மற்றும் நடேசன் போன்ற பலர் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள் மற்றும் காணாமலும் போனார்கள்.

2. மைத்திரி தமிழ்மக்களுக்கு கொடூரத்தையும் இன அழிப்பினையும் உருவாக்கி வரும் ராணுவத்தை வடகிழக்கில் இருந்து வெளி எடுக்க மாட்டார் என்றும் கூறுகின்றார்.

3. மைத்திரி தமிழ் மக்களுக்கு எப்போதும் சமஷடி அரசியல் தீர்வை நிராகரிப்பாதாகவே தொடர்ந்து கூறி வருகின்றார்.

4.முள்ளிவாக்காலில் நடந்த இன அழிப்புக்கு காரணமாய் இருந்த எவரையும் சர்வதேச விசாரணைக்கு போகாது தடுப்பார் என்றும் மைத்திரி கூறி வருகின்றார்.

இவர்கள் இரண்டுபேரும் போட்டா போட்டியாக தமிழ் இன அழிப்பினையும் தொடந்து ஆதரித்து வருபவர்கள்.

தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கு சர்வதேச விசாரணையை தடுப்பவர்கள்!

தமிழர்களை அடிமையாக வைப்பதற்கு சமஷடி தீர்வை மறுப்பவர்கள்!!

இவர்களுக்கு வாக்குபோட்டால், சர்வதேச நாடுகள் தமிழர்கள் இவர்கள் சொல்வதை ஏற்பதாக எடுத்துக் கொள்வர்கள். சர்வதேசம் தான் எம்மை காப்பாற்ற முடியும். இதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது.

-ஒபாமாவுக்கான தமிழர்கள்.