மே 18 இற்கு பிறகு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஓரளவேனும் முன்னோக்கி நகர்த்திய சக்திகள் என்று பார்த்தால்,

01. மாணவர்கள்

யாழ்பல்கலைக்கழக மாணர்களின் சில துணிச்சலான நடவடிக்கைகளும், குறிப்பாக தமிழக மாணவர்களின் உச்சகட்ட போராட்டமும் ஜெனிவா தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்தி தமிழக முதல்வர் “தமிழீழ பொதுவாக்கெடுப்புக்கு” தீர்மானம் போடுமளவிற்கு சாதனையை நிகழ்த்தியது வரலாறு.

02. மக்கள்

tn-student-usa
சிறியளவிலேனும் தாயகத்தில் மக்கள் நடத்திய துணிச்சலான போராட்டங்கள், குறிப்பாக நவிபிள்ளை மற்றும் டேவிட் கமருன் வருகையின் போது நடத்திய போராட்டங்கள் அனைத்துலக கவனத்தை ஈர்த்து தமிழீழ போராட்டத் தேரை ஒரு படி முன்னகர்த்தின என்றால் அது மிகையல்ல.

03. போராளிகள்

சில மாதங்களுக்கு முன்பு 3 போராளிகளின் வீரஞ்செறிந்த ஒரு வரலாற்று நகர்வு எதிரிகளினாலும் துரோகிகளின் காட்டிகொடுப்பினாலும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது. ஆனால் அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் வீரமும் செறிந்த அந்த நகர்வு மே 18 இற்கு பிறகான விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல் வித்துக்களாக வரலாறு அதைப் பதிவு செய்கிறது. இந்த நகர்வை இன்னும் விரித்து விளக்கம் செய்வது சிங்களத்தின் போலி விசம பரப்புரைக்கு நாமே இடம் கொடுத்ததாகிவிடும். எனவே வரலாறு மீதியை எழுதும் வரை காத்திருப்போம். தமிழ் மக்களுக்கும் சக பேராளிகளுக்கும் மட்டுமல்ல எதிரிகளுக்கும் அனைத்துலகத்திற்கும் அந்த 3 போராளிகளும் சொல்லிய செய்தி ஏராளம். இது எமது விடுதலைப்போராட்டத்தின் இன்னொரு பரிமாணத்தை உலகிற்கு துணிச்சலுடன் அறிமுகம் செய்ததென்றே கூற வேண்டும்.

போராளிகளின் புரட்சிகர வன்முறைப்போராட்டமும் உழைக்கும் மக்களின், மாணவர்களின் புரட்சியுமே விடுதலையை சாதிக்கும் என்ற உலாகளாவிய தத்துவத்திற்கு தமிழர் தேசம் மட்டும் விலக்காக முடியுமா?

இங்கு இந்த இடைப்பபட்டகாலத்தில் மெத்த படித்த மேதாவிகளோ, வெள்ளைவேட்டி கட்டி, கோட்சூட் போட்ட அரசியல்வாதிகளோ எந்த ஆணியும் புடுங்கவில்லை.

பக்கம் பக்கமாக கட்டுரைகள் ஆய்வுகள், குளிருட்டப்பட்ட அறைகளில் கருத்தரங்குகள், அனைத்துலக இராஜதந்திரிகளுடன் சந்திப்புக்கள் என்ற எந்த நகர்வும் போராட்டத்தை இம்மியளவும் நகர்த்தவில்லை. மாறாக போராட்டத்தை முடக்கின அல்லது பின்னோக்கி இழுத்தன என்று துணிந்து கூறலாம்.

ஆனால் மக்களும், மாணவர்களும், போராளிகளும் மிகவும் இக்கட்டான சூழலிலும் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி தமது பங்கை ஆற்றியபடியே இருக்கிறார்கள்.

எனவே இந்த மூன்று சக்திகளையும் களம், புலம், தமிழகம் என்ற மூன்று தளங்களிலும் பலப்படுத்துவதுடன் இந்த சக்திகளுக்கு எதிராக இயங்குபர்களை நாம் இனங்கண்டு தமிழ்ச்சூழலிலருந்து அகற்ற பின்நிற்கக் கூடாது.

ஈழம்ஈநியூஸ்.