amparai_tna_007தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் பீடத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

 

ஈழம்ஈநியூஸ் இதை வலியுறுத்தி கூட்டமைப்பிடம் இந்த கோரிக்கையை முனவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனி தமிழர்களைக்கொண்ட தேர்தல் தொகுதியாக கருதப்படும் பட்டிருப்பு தொகுதிக்கு இந்த தேசிய பட்டியலை வழங்க தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

எனினும் இந்த தேர்தலில் பட்டிருப்பு தொகுதிக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்வுப்போக்கு காணப்படுகின்றது.

 

இந்தநிலையில் பல தரப்பினராலும் பட்டிருப்பு தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.

 

தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்காக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பெரும் பங்காற்றி வருவதுடன் தமிழ் தேசியத்தினை மட்டுமே இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது.

 

இம்முறை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரண்டு மடங்கு அதிகமான வாக்குகளை தமிழ் மக்கள் அளித்துள்ளனர்.

 

குறிப்பாக பட்டிருப்பு தொகுதியில் சுமார் 80 வீதமான வாக்குகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் பட்டிருப்பு தொகுதியில் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்த உறுப்பினருக்கு தேசியப் பட்டியல் மூலம் நியமனம் வழங்க கட்சி தலைமை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது தொடாபான ஈழம்ஈநியூஸ் ஆசிரியர் தலையங்கத்தை இங்கு அழுத்திப்பார்க்கவும்..

http://www.eelamenews.com/?p=120554

 

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டும் தென்தமிழீழத்திற்கே வழங்கப்பட வேண்டும். : ஈழம் செய்திகள்