பாஜக தலைவர்களை விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என H.ராஜா பேசியிருக்கிறார்.ஜனநாயகத்தில் தவறு செய்பவர்களை விமர்சனம் செய்வது என்பது நாகரிகமான ஒரு செயல்.ஆனால் அந்த விமர்சனத்தை எதிர்க்கொள்ள முடியாதவர்கள் சமூக பொறுப்புகளிலேயே இருக்க தகுதியற்றவர்கள்.

அதிகாரம் எங்களிடம் இருக்கிறது நாங்கள் என்னவேண்டுமானலும் செய்வோம் எங்களை யாரும் கேட்ககூடாது மீறி கேட்டால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவோம் என்பது பாசிசம் ஆகும்.

மேலும் இந்துத்துவ சக்திகளை தமிழ் மண்ணில் ஏன் அனுமதிக்கக் கூடாது என்பதையே H.ராஜாவின் இந்த வன்முறைப் பேச்சு நமக்கு உணர்த்துகிறது.ஏற்கனவே பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று தரக்குறைவாக பேசிய ராஜா,இன்று அதிகார மயக்கத்தில் தமிழக அரசியல் தலைவர்களை மிரட்டும் அளவிற்கு இறங்கியிருக்கிறார். ராஜாவின் இந்த பேச்சிற்கு அரசியல் எல்லைகளை கடந்து கண்டிப்போம்.

ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற சக்திகளை தமிழ் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என உறுதி கொள்வோம்.

மே 17 இயக்கம்