மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட பாகுபாடு தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டு வைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இலங்கை அரசு சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிடப்பட்ட பாகுபாட்டைக் காண்பிப்பதாகச் சிறுபான்மையின மதக் குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

சிறுபான்மையின மக்கள் மீது மத ரீதியாக முடுக்கிவிடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அரச அதிகாரிகளோ அல்லது காவல்துறை அதிகாரிகளோ அக்கறை செலுத்தவில்லை என அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here