jalliஈழத்தில் தமிழ் இனத்தை படுகொலை செய்த இந்தியா, மவுனம் காத்து,அதற்கு துணை சென்ற திராவிட ஆட்சியாளர்கள் கூடங்குளம், மீத்தேன் காவிரி நியுட்ரினோ என எல்லாவற்றிலும் இந்தியம் நம் நலனை காலில் போட்டு மிதிக்கும். உரிமை காக்க போராடுபவர்களை காக்கி சட்டைகளை வைத்து மிரட்டும் உரிமை போக துணை நினற்ற திராவிட ஆட்சிகள் ஜல்லிக்கட்டுக்கு சென்ற ஆண்டு தடை.

 

சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடைவெளி 365 நாட்கள் ஓராண்டுகள் . இந்த ஓராண்டும் என்ன செய்தது இந்த தமிழக அரசு.

 

இதுவரை உருப்படியாக ஒன்றும் செய்யாது நம்மை தவிக்க விட்ட ஜெயலலிதா அவர்கள், இப்போது நீதி மன்றத்தை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள பார்ப்பார் இந்நிலையில் இனியும் இவர்களை நாம் நம்பி இருக்க வேண்டுமா ?

 

தமிழர்களாகிய நாம் தான் முடிவு செய்ய வேண்டும் நம்மை ஆள்பவர்கள் தமிழரல்லாதவர்கள்
ஜெயலலிதாவும் , கருணாநிதியும், பீட்டா அமைப்பும் நமக்கு ஒன்றுதான்.

 

தமிழன் எப்போது என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது, செய்வதற்கு நான் தான் அனுமதி வாங்கி கொடுத்தேன் என இனி எவரும் சொல்லக் கூடாது, சொல்ல நாம் அனுமதிக்க கூடாது.

 

எவரும் தமிழர்களை மதிக்கவில்லை ஆகவே தமிழர்களும் எவரையும் எந்த சட்டத்தையும் மதிக்க தேவையில்லை.

 

மதிக்காததால் மட்டுமே நடந்தது மாடு பிடி விளையாட்டு என்று நாம் ஜல்லிக்கட்டை நடத்திக்காட்ட வேண்டும்
“மதியாதார் வாசல் மிதித்தொரு கால் சென்று மிதியாமை கோடியுறும்”

 

ஆகவே இனியும் ஒரு நாள் தான் இருக்கும் இச் சூழ் நிலையில், நம்மை மதியாத பன்னாடைகள் படி ஏறி அனுமதி கேட்க வேண்டாம்.

 

இந்திய ஆட்சியாளர்களும் அவர்களது சட்டங்களும் மதியாதாவனை மட்டுமே மதிக்கும் இந்திய சட்டம் நம்மை மதிக்க
நாம் என்ன செய்ய வேண்டும் ?

 

ஜல்லிக் கட்டை நடத்திக் காட்ட வேண்டும்

————————————————

ஆண்டு தோறும் பொங்கல் வைத்தவுடன் குடும்பத்துடன் நீண்ட தூரம் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்ட எங்களுக்கு இந்த ஆண்டு எங்கும் செல்ல மனமில்லை. மதுரையை தவிர
மனம் முழுக்க ஜல்லிக் கட்டு ஒன்றே நிரம்பியுள்ளது
மதுரையில் நாளை 15.1.16 இரவு சிந்திப்போம்

 

நன்றி – அதியமான்