இனஅழிப்பு அரசு லைகாவை தமிழகத்தில் ஊடுருவ விட்டதன் பின்னணியில் ஒரு நோக்கம் இல்லை. பல நோக்கங்களுடன் பல இலக்குகளை குறிவைத்த நகர்வு அது.

இதை தெளிவாக தமிழ் தேசிய சக்திகள் புரிந்திருந்தால் தற்போதைய குழப்பங்கள் ஏதும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

“கத்தி” பட எதிர்ப்பாளர்கள் பலர் குறிப்பிடுவது போல் அது தமிழர்களின் பொருளாதாரத்தை சுரண்டும் முயற்சி மட்டுமல்ல.. அது ஒரு உதிரி காரணம் மட்டுமே. அதை விட ஆழமான ஆபத்தான நோக்கங்கள் லைகாவின் தமிழக நுழைவின் பின்னணியில் இருக்கின்றன.

அவற்றை இங்கு பட்டியலிடத் தொடங்கினால் முகநூலில் எழுதப்பட்ட முதல் நீண்ட நிலைத்ககவலாக வரலாற்றில் அது பதிவாகும்.

அவ்வளவு நோக்கங்கள் இதன் பின்னணியிலிருக்கின்றன.

kaththi-7
மே 18 இற்கு பிறகான தாயகம், புலம், தமிழகம் என்ற 3 வகையான ஈழவிடுதலைப்போராட்ட தளங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை குவித்ததும் குவித்து வருவதும் தமிழகம்தான்.

அண்மையில் தமிழக முதல்வர் இந்திய பிரதமரிடம் “தமிழீழ பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஐநாவில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் ” என்று கொடுத்த மனு இதன் உச்சக்கட்ட பாய்ச்சல் எனலாம்.

இதனால் ஒன்று திரண்டுள்ள தமிழக போராட்ட சக்திகளை உடைக்க வேண்டிய தேவை சிங்களத்திற்கு இருக்கிறது. லைகா நுழைவின் முதன்மை நோக்கங்களில் ஒன்று இது.

அந்த இலக்கை நோக்கி லைகா நுழைவு மூலம் நீண்டகால நோக்கில் திட்டமிட்டு களமிறங்கிய சிங்களத்திற்கு “கத்தி” படம் வெளிவராமலேயே வெள்ளிவிழா வெற்றியை பரிசளித்திருக்கிறது “தமிழகம்”.

மாணவர்கள் ஒரு புறமும், தமிழகத் திரைத்துறையினரும் ரசிகர்களும் மறுபுறமும், தமிழ்த்தேசிய போராட்ட இயக்கங்கள் வேறாரு புறமும் என்று முட்டி மோதி ஒரு போர்க்களமாக காட்சியளிக்கிறது தமிழகம்.

சிங்களம் எதிர்பார்த்த காட்சி கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இனி “கத்தி” படம் வந்துதான் என்ன? வராமல்தான் என்ன?

உடனடியாக மறுபேச்சுக்கு இடமின்றி லைகா குழுமத்தை எதிர்ப்பது என்ற புள்ளியில் எல்லோரும் ஒன்று திரள வேண்டும்.

ஈழப்போராட்ட வரலாற்றில் நீண்ட அனுபவம் உள்ளவராக, ஒரு முன்னோடியான நெடுமாறன் ஐயா அவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு ஒரு சுமுகமான முடிவை எட்ட வழி செய்ய வேண்டும்.

எந்த வடிவத்திலும் எந்த வகையிலும் இனி சிங்களம் வெல்வதை நாம் அனுமதிக்க முடியாது.

பெண்ணிய உளவியலாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான திரு பரணி கிருஸ்ணரஜனி.