மலையக தோட்டங்களில் தமிழ் பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

தோட்டப்புற தமிழ் பெண்களை இலக்கு வைத்து கருக்கலைப்பு செய்யும் விளம்பர அட்டை ஒன்றை நுவரெலியா கொட்டகலை பிரதேசத்தில் விநியோகித்துள்ளதாக தெரியவருகிறது.

சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் குறித்து தகவல்களை வெளியாகியுள்ள போதிலும் முதல் முறையாக விளம்பரம் செய்து நடத்தி வரும் கருக்கலைப்பு மையம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

 

தோட்ட தொழிலாளிகள் நடமாடும் இடங்களில் தொலைபேசி இலக்கங்களுடன் இந்த விளம்பரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரியவருகிறது.

 

இது குறித்து பிரதேச பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எந்த பயனும் ஏற்படவில்லை.
மலையகத்தில் தமிழ் மக்கள் தொகையில் வீழ்ச்சியை ஏற்படுத்த பல காலமாக இந்த கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்ப்பரம்பலை கட்டுப்படுத்தும் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சி இது என்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.