மாணவ போராட்டத்தை இருட்டடிப்பு செய்கிறதா ஆனந்த விகடன்?

0
746

TN-Studentபுதிய வருடம் பிறப்பதற்குமுன்பு, டிசம்பர் கடைசி வாரம் ஒவ்வொரு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் என அணைத்துநிறுவனங்களும் அந்த வருடத்தின் நிகழ்வுகளை தொகுத்து வெளியீடும் மற்றும் சில நிறுவனங்கள்சிறந்த செயல் புரிந்தவர்களுக்கு விருது அளிக்கும். ஆனந்த விகடன் தமிழில் முன்னனியில்இருக்கின்ற வெகுசன வார இதழ் என்பதை நாம் அறிவோம். ஆனந்த விகடன் பத்திரிக்கையும் வருடஇறுதில் விருது பட்டியல், வருடத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்த பட்டியல் வெளியீடும்.தமிழ் சூழலில் பரவலாக ஏற்றுகொள்ளப்படும் உண்மையான கருத்துகளை இதுவரை வெளியீட்டு வந்தது.ஆனால் இந்த 2013ம் ஆண்டுக்கான பட்டியல் இப்பொழுது வெளி வந்து உள்ளது. இதை பார்க்கும்போது ஆனந்த விகடனின் பத்திரிக்கை தர்மம் மீது சந்தேகம் எழும்புகிறது.

மாணவர் போராட்டம்:-

பாலகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்த புகைப்படங்கள்சேனல் 4 ஆவணப்படத்தில் வெளியானது. இதை பார்த்த மாணவர்கள் கொதித்து இருந்தனர். 2013ம்மார்ச் மாதம் 8ம் நாள் இலாயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் சாகும்வரை உண்ணாவிரதை தொடங்கினார்.அந்த போராட்டத் தீ தமிழகம் எங்கும் பரவியது மாணவர்கள் வீதியில் இறங்கினார்கள். தமிழகஅரசியல் மட்டுமல்ல உலகளவில் மிக பெரிய கருத்தியல் மாற்றத்தை செய்தது இந்த மாணவ போராட்டம்.தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் இதனால் நிகழ்ந்தது. தமிழ் அறிவுஜீவிகள் வட்டத்தில்மாணவர் போராட்டம் என்பது ஆரோக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டது (EPWவில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்மாணவர் போராட்டத்தை எழுதும் போது கூட “Tamil Nadu student upsurge: A Tamil Springதமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சி: தமிழின் புது மலர்ச்சி” என்று எழுதினார்).

ஆனால் பார்பானீயத்தைதூக்கி பிடிக்கும் சுப்ரமணிய சுவாமி போன்றவர்களுக்கு அது மிக பெரிய பிரச்சனையாக தோன்றியதுஎன்பதை அன்று செய்திகளை கவனித்த அணைவருக்கும் தெரியும். ஆனால் இன்று ஆனந்த விகடனின்டாப் 10 பிரச்சனைகளில் மாணவ போராட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதை பார்த்தபோது மிகவும்அதிர்ச்சிகரமாக உள்ளது. ஒரு போராட்டத்தை வெகுசன பத்திரிக்கை பிரச்சனையாக வகைப்படுத்தும்போது, போராட்டம் குறித்து எதிர்மறையான கருத்துக்கள்உருவாக்குகிறது மற்றும் மாணவபோராட்டத்துடன் வகைப்படுத்தப்பட்டுள்ள மற்ற பிரச்சனைகள்அனைத்தும் சமூகத்திலிருந்து களையப்பட வேண்டிய பிரச்சனைகள். இதற்கு மத்தியில் மாணவ போராட்டமும்இடம் பெற்று உள்ளது. மின்வெட்டு பிரச்சனையும், சாதிய வண்முறையும் போன்றது தான் மாணவர்போராட்டமும் என ஆனந்த விகடன் கூறுகிறது.

மாணவ போராட்டம்பற்றி மதிப்பிகுரிய எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார்.

மாணவ போராட்டம்பற்றிய தெளிவான தகவல்கள் இக்கட்டுரையில் இல்லை மற்றும் வரலாற்று பிழைகள் உள்ளது. கட்டுரையின்தொடக்கத்தில் பிளாசி போரை பற்றி கூறிள்ளார், 1757யில் பிளாசி போர் நடந்தது ஆனால்1847 என தவறாக உள்ளது இது அச்சுப்பிழையா இல்லை உண்மையில் பிழையாக எழுதப்பட்டதா? என்றுகூறினால் நலமாக இருக்கும். இதில் மாணவ போராட்டத்தின் வெற்றியாக ஜயா மூன்று கருத்துக்களைமுன்வைக்கிறார் அவை அவரின் தனிப்பட்ட கருத்துகளாக உள்ளது.

//முதல் கருத்து(வெற்றி):எந்த அரசியல் கட்சிகளுக்கும் கட்டுப்படாமல் ,அதே நேரம் அனைத்துக் கட்சிகளையும் அந்நியப்படுத்திமேலெழுந்தார்கள் மாணவர்கள்.

இரண்டாம் கருத்து(வெற்றி):மாணவரின் எழுச்சி தன்னை தேர்தலில் வேரோடு பிடுங்கி எறிந்து விடுமோ என்ற நடுக்கத்தில்நடுவண் அரசின் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வேகவேகமாக விலகிவந்தது தி.மு.க.

மூன்றாம் கருத்து(வெற்றி):தமிழீழத்திக்கானபொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இனப்படுகொலையாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிபண்ணாட்டு விசாரணை நடத்திட ஜ.நா. முன்வர வேண்டும். எனும் சிறப்பான தீர்மாணங்களை தமிழகசட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தது.//

கடைசி இரண்டு கருத்துக்கள்போராட்டத்தின் விளைவாக நடந்தது அவை வெற்றிகள் அல்ல. இன்னும் தெளிவாக கூறினால் உண்மையானவெற்றியை நோக்கி மாணவர்கள் நகர கூடாது என்பதற்க்காக நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள்.

முதல் கருத்துஉண்மை தான் ஆனால் இந்த போராட்டம் ஏன் கட்சிகளுக்கு பின்னால் இல்லை என்றால் இன்றைய அரசியல்சூழலில் எந்த அரசியல் கட்சியும் மாணவ மத்தியிலோ அல்லது மாணவரின் கருத்தியலிலோ இடம்பெறவில்லைஎனவே தான் அரசியல் கட்சிகள் கீழ் இந்த போரட்டங்கள் வரவில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது திராவிட இயக்கத்தின் கருத்தியல் மாணவர் மத்தியில் இருந்தது. எனவே தான் பின்னாளில்தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கைப்பற்றியது (ஆனால் ஜயா பா.ஜெயபிரகாசம் போன்றசிலர் இந்த சூழ்ச்சியில் சிக்காமால் கடைசி வரை தெளிவாக போராடினர்). இன்று பல கட்சிகளுக்குகருத்தியல் தளமே இல்லை. எனவே தான் மாணவர் போராட்டம் கட்சிகளின் ஆளுமையின் கீழ் வரவில்லை.இதுஇன்றைய அரசியல் சூழ்நிலை. இதை வெற்றியாக கருத முடியாது. மாணவ போராட்டத்திற்கு ஏற்பட்டநண்மையாக தான் கருத முடியும்.

இந்த போராட்டத்தின்வெற்றி என்பது அடுத்தக்கட்ட போராட்டத்திற்கான தளத்தை அமைப்பது தான், ஏனெனில் இது தமிழீத்திற்கானஒரு தொடர் போராட்டம், பகத்சிங் கூறுவது போல் தான் ”இந்த போராட்டம் என்னொடு தொடங்கவும்இல்லை, என்னொடு முடிய போவதும் இல்லை” அந்த கோணத்தில் தான் இந்த போராட்டத்தின் வெற்றியைபார்க்கிறோம். மாணவ போராட்டத்தால் தேசிய ஊடகங்ளில் ஒரு சிறு விவாதத்தை ஏற்படுத்த முடிந்தது.ஆனால் இதுவும் ஒரு முழுமையான வெற்றியல்ல.

மிகவும் முக்கியமானநிகழ்வு என்பது அமெரிக்காவின் முகத்திரை கிழித்து எறியப்பட்டது தான். ஈழ தமிழர்களுக்குதீர்வாக சொல்லப்பட்ட அமெரிக்கா தீர்மாணம் குறித்து உண்மை வெளிகொணரப்பட்டது. அமெரிக்காதீர்மாணம் என்பது அயோக்கிய தீர்மாணம் என்பதை மாணவர்களின் மூலம் இந்த உலகம் தெரிந்துகொண்டது. இதனால் அமெரிக்க தீர்மானம் தாண்டி ஈழ குறித்து பேசவும், போராடவும் வேண்டும்என்ற கட்டாய நிலை உருவாக்கப்பட்டது. இதைத்தான் தற்கால வெற்றியாக கருதுகிறோம்.

இக்கட்டுரையில்விடுப்பட்ட ஒரு முக்கியமான செய்தி“மாணவர்கள்தீர்மாணத்தை எதிர்தார்கள் என்பதும், அந்த தீர்மாணத்தை எரித்தனர் என்பதும்” இந்தகருத்து இக்கட்டுரையில் ஒரு இடத்திலும் இல்லை. எதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டதோஅந்த கருத்தே இல்லை.இதில் கவணிக்கப்பட வேண்டியஒரு செய்தி, பக்கம் 38யில் டாப் 50 சம்பவங்களில் பாலச்சந்திரனின் மரணம் இடம் பெற்றுஉள்ளது. அதில் அமெரிக்கா தீர்மாணத்தை ஆதரித்து மாணவ போராட்டம் நிகழ்ந்தாக எழுதப்பட்டுள்ளது.இது கட்டாயமாக அச்சுப்பிழை இல்லை. கருத்துப்பிழை.

முன்பக்கத்தில்தவறான தகவல்(அமெரிக்கா தீர்மாணத்தை மாணவர்கள் ஆதரித்தாக) மாணவ போராட்டம் குறித்த கட்டுரையில்அமெரிக்க தீர்மாணம் குறித்து தகவலே இல்லை. போராட்டத்தின் உண்மையான நிகழ்ச்சியை கூறாமல்,வேற கருத்துகளை கூறுவது என்பது திட்டமிட்டு கோரிக்கையை மழுங்கடிக்கும் செயல்.

ஆண்டின் இறுதிஇதழில் தவறான செய்தி வருகின்றது என்றால், அது வரலாற்றுப்பிழை. ஆனந்த விகடன் வரலாற்றுப்பிழைசெய்துள்ளது. தி.மு.க ஊடகங்கள் தான் அமெரிக்க தீர்மாணம் ஆதரித்து மாணவ போராட்டம் நடந்ததாகபொய் பரப்புரை செய்தது. இன்று ஆனந்த விகடனும் இதை செய்கிறது. இதற்கான விளக்கத்தை ஆனந்தவிகடன் தருமா?

கு.சிபி லெட்சுமணன்-ஒருங்கினைப்பாளர்

பாலச்சந்திரன்மாணவர் இயக்கம்