மாவீரர் நாளில் கனடா பாராளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்த கனடா பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன்.
கனடா பாராளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூற முடிகிறது, ஆனால் தாய்த் தமிழகத்திலோ மாவீரர் நாளை அனுசரிக்கக் கூட தடை விதித்தது தமிழக அரசு.

உலகில் தமிழினத்திற்கு என்று ஒரு நாடு வேண்டும் என்று போராடியவர்கள் மாவீரர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர்கள் மாவீரர் நாளில் மரியாதை செலுத்துவது தமிழர்களின் கடமையாகும்.

அந்த வகையில் தமிழர்களுக்கு என்று இருக்கும் ஒரே அரசான தமிழக அரசு மாவீரர் நாளை நியாயமாக அரசு விழாவாகவே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசும் மாவீரர் நாளை அனுசரிக்கவில்லை, தமிழகத்தின் எதிர் கட்சிகளும் அனுசரிக்கவில்லை. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. தமிழகத்தில் ஆளும் அரசும், எதிர்க் கட்சிகளும் தமிழர்களுக்காக செயல்படவில்லை என்பதாகும்.