மாவீரர்கள் நமது வழிகாட்டிகள்; நமது முன்னோடிகள். நமது பாட்டன்கள் பாரி,பேகன், போன்றவர்கள் மயிலுக்குப் போர்வையும், முல்லைக்குத் தேரையும் தந்ததே வள்ளல்தன்மை என்றால்,தமது உயிரையே இந்த இனத்திற்காக கொடையாகக் கொடுத்தவர்கள் எவ்வளவு பெரிய மாவீரர்கள்.

seeman-hero
பனைமரம் தமிழர்களின் தேசிய மரம். ஈழத்தில் களத்தில் பலியான மாவீரர்களாக விழுந்தவர்களின் எண்ணிக்கைவிட பனைமரங்களின் எண்ணிக்கை அதிகம். சுவரொட்டியில் துப்பாக்கியை பொதித்து வீரவணக்கம் செலுத்தமுடியாதபோது பனைமரத்தை பொதித்து வீரவணக்கம் செலுத்துகிறோம். ஏனென்றால், பனைமரம் நம் இனத்தின் குறியீடு. உலகில் எங்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சாவுக்கு வழியனுப்பியதில்லை.

ஆனால், அது தமிழீழத்தில் நடந்தது. நான் சந்தித்த தாய் ஒருத்தி, பிரபாகரனுக்கு காலடியில் கிடக்கும் புல்கூட புலியாக மாறி போராடும் என்று சொன்னாள். புழுகூட தன்னை தாக்குகிறபோது துடித்தெழுந்து எதிர்ப்பை காட்டுகிறது. பூனையை ஒரு அறைக்குள்விட்டு அடித்தால் பூனைகூட புலியாக மாறுகிறது. ஆதலால், மானத்தமிழ் பிள்ளைகள் புலியாக மாறி போராட வேண்டியிருக்கிறது. அதிகாரம் என்பது அற்பம்.

நமது இலக்கு தேசிய இனத்தின் விடுதலை. நமது மாவீரர்கள் களத்தில் யாருக்காக விழுந்தார்கள்? நமக்காக.நம்மை நம்பி. நம்மைப்போல இன்னொரு அடிமை பிறக்கக்கூடாது என்பதற்காகத்தான் விழுந்தார்கள். நாம் ஏழைகளாகக்கூட இருக்கலாம்.ஆனால், ஒருபோதும் கோழைகளாக இருக்கக்கூடாது.ஒருபக்கம் காவல்துறையை வைத்து நம்மை முடக்க நினைக்கிறார்கள் ஆள்கிறவர்கள்.ஆள்கிற அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள். மாவீரர்களின் தியாகத்தை மறைக்கப் பார்க்கிறது.

நெருப்பை குப்பையை கொட்டி எப்படி அணைக்க முடியாதோ,அதேபோல் என்ன தான் அரசாங்கங்கள் செய்தாலும், மாவீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது. உலகநாடுகளின் துணைகொண்டு ஈழ நிலத்தில் புலிக்கொடியை இறக்கினார்கள்.அந்த நிலையிலே இந்த மண்ணில் புலிக்கொடியை நாங்கள் தூக்கி பிடித்தோம்.

இதை இனி இறக்குவதற்கு வாய்ப்பே இல்லை.ஈழம்,தமிழகம் இரண்டிலும் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு புலிக்கொடி பறக்கிற வரை நாங்கள் ஓய மாட்டோம்.எவரை பார்த்தும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.இலங்கையும்,சில உலகநாடுகளும் தலைவனின் படையை பார்த்துதான் பயந்தது.இந்திய அரசும்,தமிழக அரசும்,தலைவனின் படத்தை பார்த்தே பயப்படுகிறது. சுவரொட்டியில் உள்ள தலைவனின் படத்தை பார்த்து இந்த அரசுகள் ஏன் அலறுகிறது என்று தெரியவில்லை. ஈழத்திற்காக போராட யாருமே இல்லையே என்று வருத்தப்பட்டு காலையில் ஒருவர் கேட்கிறார்.

அவரிடம் கேட்டேன், நீங்கள் ஏன் அடுத்தவரை எதிர்பார்க்கிறீர்கள் என்று. யாரோ ஒருவர் ஈழம் பெற்று தருவார்கள் என்று எண்ணக்கூடாது.நாம் தான் போராடி வென்றெடுக்க வேண்டும் என ஒவ்வொருத்தனும் முடிவெடுக்க வேண்டும். எல்லாம் முடிந்துவிட்டது,எதுவுமே செய்ய முடியாது என்று நினைப்பவன் ஓடிப்போய்விடு.இது எனது மண்.என்னால் தான் முடியும்.என்னை மீறி எவனும், எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பவன் மட்டும் என்பின்னே வா.

இந்த மாவீரர் திருநாளில்,ஈகைச்சுடர் நாளில் ஒவ்வொரு தமிழனும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி எதுவாக இருக்க வேண்டுமெனில்,நமது மனதிற்குள் உள்ள நான் பெரியவன், நீ சிறியவன் என்கிற அகந்தையை ஒழித்து,நம்மை விட நமது இனத்தின் விடுதலை முக்கியம் என ஒவ்வொருத்தரும் எண்ண வேண்டும்.தமிழர்கள் ஒன்று திரளாத வரை,அரசியல் எழுச்சி பெற முடியாது.அரசியல் எழுச்சி பெறாமல்,இன விடுதலையை சாத்தியப்படுத்த முடியாது. ராஜிவ்காந்தியை கொன்று விட்டார்கள்; கொன்று விட்டார்கள் என்று நம்மீது குற்றம் சாட்டி குற்ற உணர்வு ஏற்பட வைக்கிறார்கள்.

வரலாறு மாறும்.அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஒரு வரலாறுதான் இருக்கும்.அது என்னவெனில், தமிழ் இனத்தை அழித்த துரோகியை,தமிழர்கள் தங்கள் தாய் நிலத்திலே அழித்தார்கள் என்று பெருமையோடு சொல்கிற சூழல் வரும்.இதே மண்ணில் ராஜிவ்காந்திக்கு இருக்கிற நினைவிடத்தை விட, மிகப்பெரிய அளவில் அக்கா தனுவிற்கு நினைவிடம் கட்டி கொண்டாடுவோம்.எனக்காக உயிரை கொடுத்தவரை,நான் கொண்டாடமல்,வேறுயார் கொண்டாடுவது? இன்றைக்கு சமஸ்கிருதத்தை படித்தேயாக வேண்டும் என்கிறார்கள்.

அதைவைத்து நாங்கள் என்ன செய்வது.சமஸ்கிருதம் படித்தால் கோயிலில் மணியாட்ட மட்டும் தான் முடியும்.நாங்கள் சமஸ்கிருதம் படித்தாலும் ,கோயிலில் எங்களை மந்திரம் ஓத அணுமதிப்பீர்களா? பார்ப்பனன் தன்மொழி சமஸ்கிருதம் அழிந்துவிடக்கூடாது என்று உறுதியோடு நிற்கிறான்.ஆனால், தமிழன் இதே உறுதியோடு நிற்கிறானா? என் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் சொன்னால்,நம்மை பிரிவினைவாதிகள்,தீவிரவாதிகள் என்கிறார்கள்.தமிழை படிக்க வேண்டும் என்று சொல்கிற நாங்கள் தீவிரவாதியென்றால்,எனக்கு சம்பந்தமே இல்லாத ஹிந்தி,சமஸ்கிருதத்தை திணிக்கிற நீங்கள் என்னவாதிகள்? நான் விருப்பப்பட்டால் எந்த உணவையும் உண்ணுவேன்.

ஆனால், எனக்கு பிடிக்காத உணவை என் வாயில் திணித்தால், திணித்தவன் கையை எடுத்தவுடன் அவன் மூஞ்சியிலேயே துப்புவேன்.அதுபோல, இந்த நாட்டில் நான் விரும்பாத போது சமஸ்கிருதத்தையும்,ஹிந்தியையும் திணிக்கிறானே, நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் விருப்பபட்டு படிக்கலாம்.ஆனால், இதைத்தான் படிக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? இப்படி மற்ற மொழிகளையே முன்னிறுத்தினார் என் மொழி எப்படி வாழும்? யாரும் வரலாம்.வாழலாம்.ஆனால் எமது சொந்தவரே இனி ஆளனும். வந்தவரை எல்லாம் வாழ வைப்போம்.இனி மண்ணின் மைந்தரையே ஆள வைப்போம். இதை பேசுவது மொழி தீவிரவாதம் அல்ல.

இது எங்களது அடிப்படை உரிமை. நம்மை பார்த்து சிலர், ‘சின்ன பசங்க’ இவர்களை பொருட்படுத்தத் தேவையில்லை என்றார்கள்.’வெட்டிப்பேச்சு’ பேசுகிறார்கள் என்றார்கள்.சொன்னவர்கள் பலர், இன்று அதிகாரம் இல்லாமல்,அரசியலில் அனாதையாக ஆகியிருக்கிறார்கள்.

ஒரு அறிஞன் சொல்லுகிறான்.தொடங்கும்போது வீண் முயற்சி என்பார்கள்.வென்றுவிட்ட பிறகு விடாமுயற்சி என்பார்கள்.அதுபோல எதிர்காலத்தில் இந்த சின்ன பசங்கள் விடாமுயற்சிக்காரர்கள் என்று உலகம் சொல்கிற காலத்தை உருவாக்குவோம்.

2016இல் அசைக்க முடியாத வரலாற்று மாற்றத்தை நாம் தமிழர் கட்சி இந்த மண்ணில் நிகழ்த்தும்.