TNPF-2015-1அன்புக்குரிய புலம் பெயர்வாழ் தமிழ் மக்களே!

 

மிக முக்கியமான வரலாற்றுக் கடமையாற்ற வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கின்றோம்.

 

இத் தேர்தல் நிச்சயமாக எமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள தேர்தல் ஆகும். வழமையான தேர்தல் போலன்றி இம் முறை தமிழர்கள் சரியான வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். அது கட்சி என்ற வட்டத்தினைத் தாண்டி சரியான வேட்பாளர்கள் தெரிவாக இருக்கவேண்டும் . அதுவே புதிய ஆரோக்கியமான தலைமையை உருவாக்கவும், பலமான கொள்கைபற்றுடைய பேரம் பேசும் சக்தியாக இருப்பதற்கும் முக்கியமானதாக அமையும்.

 

தமிழ் தலைமைகளில் எமக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் உள்ளனர். இவர்களுக்கு பின்னே உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் வெற்றி கொள்ள வைப்பதன் முலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புத்துயிர் பெறும்.

 

இவர்கள் நிச்சயமாக எமது இன விடுதலைக்கு ஓங்கிக் குரல் கொடுப்பார்கள். எமது மக்கள் மீதான இனவழிப்பு பற்றி முழுயைமான செய்தி மீண்டும் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்டும் . தமக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகராத்தினையும், சிங்கள் அரசாங்கம் எக்காலத்திலும் எமக்கான தீர்வினை தரப்போவதில்லை என்பதனையும் போர்க்குற்றத்திற்கு உள்ளக பொறிமுறை என்றுமே நீதியை பெற்றுக் பொடுக்கவில்லை என்பதனையும் ஆதார பூர்வமாக எடுத்துரைப்பார்கள்.

 

எனவே இதன் வரலாற்றுக் கடமையை உணர்ந்து தாயகத்தில் உள்ள உங்கள் உற்றார் உறவனர்கள் மற்றும் நண்பர்களுக்கு சரியான புரிதலையும், வேட்பாளர் தெரிவினையும் விளங்கப்படுத்தி புதிய தமிழ்த் தலைமைக்காக வாக்களிக்கும் படி உங்கள் தொலைபேசு மூலமோ மின்னஞ்சல் மூலமோ கூறுங்கள்.

 

நன்றி.

 

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு