ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு 16.05.2014 அன்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் இன்று தமிழ்நாடு வரலாறு என்றும் காணாத அமோகா வெற்றியை அடைந்த உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் தங்கள் வாழ்த்துக்கள் என கூறி இருந்தார்கள்.

மேலும் அக்கடிதத்தில்:

” இந்த அமோகா வெற்றி எங்கள் தமிழ்நாட்டு சொந்தங்களுக்கும், ஈழ தமிழர்களுக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி ஆகும்.

நாம் இப்பட்டியான ஒரு நாள் என்றோ ஒரு நாள் வந்து சேரும் என்று கனவு கண்டுகொண்டு பல காலமாய் இருந்தோம். அது இன்று நனவாகி வந்து சேர்ந்துள்ளது.

Jayalalithaa_pointing_finger_295
உங்கள் கட்சியின் வெற்றி ஈழத்தமிழரின் கடந்த இருண்ட பத்து வருடங்களையும் ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

ஈழத்தமிழர்கள் தமிழர்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் துன்பமாகிய கொலைகள், தமிழ் பெண்களை கற்பழிப்பது, தமிழ் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள், தாய்மார்கள்மற்றும் தந்தைகள் காணாமல் போவது, எம்மை எம் இடத்திலிருந்து அகற்றுவது போன்ற இன அழிப்பு சார்ந்த செயற்பாடுகள் எல்லாம் இன்றிலுருந்து ஒரு முடிவுக்குவருவதற்கு வழிவகுக்கப்படும் என்று ஈழ தமிழர்கள் நம்புகிறார்கள்.

மார்ச் 27, 2013 அன்று தமிழகச் சட்டசபையில் நீங்களே நேரடியாகக் கொண்டு வந்த தீர்மானத்தில் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு கொண்டுவருதல், சிறிலங்காவைபகைநாடாக அறிவித்தல், போர்க்குற்றம் மீதான சர்வதேச விசாரணை, பொருளாதாரத்தடை போன்ற விடையங்களை தீர்க்கமாக வெளியிட்டு தீர்மானம் கொண்டுவந்து, அதனைபெரும் பான்மை ஆதரவுடன் நிறைவேற்றியமைக்கு மீண்டும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

மேலும் உங்கள் கட்சியும் இந்தியாவில் மூன்றாவது பெரும்பாமை கட்சியாக உருவெடுத்து இருப்பதால். உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் பல பொறுப்புகள் இருப்பதால், நீங்கள் எடுக்கும் எந்த முன்னெடுப்பும் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.” என கூறி உள்ளார்கள்.

இந்த வெற்றியானது ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கிய அநீதிகளுக்கு எதிராக தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பு என்று மட்டுமல்லாது இறைவனாலும் கொடுக்கப்பட்ட தீர்ப்பாகும் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.