islam-7isla-mayமுள்ளிவாய்க்கால் முடிவல்ல ”தமிழீழம் வெல்லும்”  என்ற முழக்கத்துடன் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் திருப்பூரில் நினைவேந்தல் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தது. இந்த நிகழ்விற்கு  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் அப்துல்காதர் தலைமைவகித்தார்.

 

எழுத்தாளர் பழனி ஷஹான் நூர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் கவிஞர் அமீர் அப்பாஸ், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  உமர்கயான் தொகுப்புரை நிகழ்த்தினார்,

 

இனப்படுகொலையால் மாண்ட மக்களுக்கும், மாவீரர்களுக்கும் தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூத் நன்றி கூறினார். நிகழ்வில் பெரும் அளவு தோழர்கள் வந்திருந்தனர், இசுலாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், இசுலாமிய சகோதரர்களும் நிகழ்விற்கு வந்து இனப்படுகொலையால் மாண்ட மக்களுக்கு நீதி கோரிய பயணத்தில் தங்களின் ஆதரவை தெரிவித்தார்கள்.