இன்று ஜெனிவாவில் முஸ்லிம்கள் தம் மீது நடாத்தப்பட்டு வரும் “தாக்குதல்களுக்கு” எதிராக ( அது இன அழிப்புத்தான்.. ஆனால் நாம் அப்படி வரையறுப்பதை முஸ்லிம்களே ரசிப்பதாக தெரியவில்லை. எனவே அவர்களின் மொழியிலேயே “தாக்குதல்” என்போம்) ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.. அப்போது சிறீலங்கா தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

geneva_muslim_protest_304x171_bbc_nocredit
சில நாட்களுக்கு முன்பு லண்டனில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் அதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இது அவர்களின் நம்பிக்கை. இதை நாம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இதயசுத்தியுடன் தமிழர்கள் முஸ்லிம்களின் பக்கம் நிற்கிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் புலத்திலிருந்து கூட ஆதரவு கரங்கள் நீண்டிருக்கின்றன.

எனவே நாம் அவர்களின்; அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும். ஆனால் நாம் அவர்களின் போராட்டங்களில் தமிழீழ தேசியக்கொடியுடன் கலந்து கொள்வது குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன.?

tamil-version-of-national-anthem
அவர்களும் சிறீலங்கா தேசியக்கொடியை கைவிட்டுவிட்டு வந்தால் நாமும் வெறுங்கையுடன் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இது தொடர்பாக அவர்களின் பதில் என்ன?

அவர்கள் சிறீலங்கா தேசியக்கொடியுடன் வரும் போது நாம் வெறுங்கையுடன் செல்வது எம்மையும் இலங்கையர்களாக அடையாளப்படுத்தும் ஆபத்து இருக்கிறது.

இது அடிப்படையிலேயே முரணானது.. எமது விடுதலைக்கு, அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானது.

எனவே இது ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தப்படுவது அவசியம்.

அதுவே முஸ்லிம்களுடன் இணைந்து போராடுவது குறித்த தெளிவான புரிதலுக்கு வழி செய்யும்.

ஈழம்ஈநியூஸ்.