மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிரான போராட்டங்கள்

0
617

canada protest 10பிரித்தானியாவிலும் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிர்ப்புப் போராட்டம்

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழகத்திலும் மும்பையிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்றுவரும் இப்போராட்டம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருவதாக பதிவின் செய்தியாளர் தொிவிக்கின்றார்.

மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை. பேனர்கள் கிழிப்பு!

நாளை வெளியிட தயாராக இருந்த மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழில் வெளியிட மதுரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தமிழகத்தில் ஹிந்தியில் வெளியிட இருந்தது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து அப்படம் தமிழகத்தில் வெளியாவது கடினம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திரையரங்கு உரிமையாளர்களும், மக்கள் மனதை புண்படுத்தும்படியான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது. சென்னையில் மாணவர்கள் ஏற்கனவே போராட்டத்தை முன்னெடுத்து விட்டனர் .

இப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார் , படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவைகளாக இருக்கின்றன, பிரபாகரன் தீவிரவாதியாக காட்டப்படும் திரைபடம் வெளிவந்தால் அது தமிழர்களை அவமானபடுத்து போல் அமையும். அதனால் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே மும்பையில் அந்த படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் மும்பையில் களத்தில் இறங்கி முதல் அடியை கொடுத்துள்ளனர் மும்பை பாஜக கட்சியினரும் மற்றும் தமிழ் அமைப்பினரும். இன்று மும்பை சினி மேச்க்ஸ் திரை அரங்கம் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது. ப்ளெக்ஸ் பேனர்கள் கிழிப்தெரியப்பட்டு அனைத்து பதாகைகளும் உடைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
canada protest 2
சாதி மதம் அரசியல் கடந்து ஒற்றுமையாக களமாடினர் தமிழர்களுக்கு மும்பையில் சாதித்து விட்டனர் . தமிழகத்தில் நம் பலத்தை காட்டுவோம் என்று கூறுகின்றனர் தமிழக தமிழர்கள்.

மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெள்ளிக்கிழமை தமிழ் மக்கள் முற்றாக புறக்கணித்தனர்

வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்து மாலை வரை கனடியத் தமிழர்கள் டொரொண்டோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மதியத்திலிருந்து திரைப்படம் யாவும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

அரசின் சதியின் பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘மெட்ராஸ் கஃபே’ என்ற திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் இன்று ஆகஸ்டு மாதம் 23 ம் திகதி திரையிட முயற்சிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படுவதை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து மாபெரும் மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இதனை அடுத்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரைஅரங்குகளும் இப்படத்தை திரையிட மறுத்திருந்தனர். இந்தியாவின் மற்றய மானிலங்களிலும் இப்போராட்டம் விஸ்தரித்திருந்தது.

சனல்-4 மாதிரியான ஆதார பூர்வமான திரைப்படத்தை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரசு, இப்படியான புனை கதைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் திரைப்படத்தை மூன்று மொழிகளில் திரையிட்டு மக்களின் மனதில் இராணுவத்தை மேலாகவும், தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளையும், போராட்டத்தையும் இழிவு படுத்தவும் முயற்சிக்கின்றது.

ஈழத் தமிழர்களது நீதிக்கான நியாயமான விடுதலைப் போராட்டம் தமிழக தமிழர்களையும் உலகத் தமிழ் மக்களையும், வேற்று இனத்தவர்களையும் தன்பால் ஈர்த்து அணிசேர்த்து வலுவடைந்து வரும் நிலையில் இந்த உணர்வை சிதைத்து எம் தமிழீழ விடுதலைபோராட்டதின் பால் தமிழர்க்கு உள்ள நம்பகத்தன்மையையும் பற்றுறுதியையும் முறியடிக்கும் நோக்கோடு திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். தமிழகத்தில் மட்டுமன்றி தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை பாதிக்கும் வலுவான ஊடகம் திரைத்துறை என்பதை உணர்ந்து இலங்கை அரசு அதனையே ஆயுதமாக தேர்ந்தெடுத்து இந்த சக்திவாய்ந்த ஊடகத்தினூடாக ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தை வில்லத்தனமான சூழ்ச்சியோடு எமக்கு எதிரான ஆயுதமாகப் படைத்துள்ளது . அது மட்டுமன்றி தமிழர்களை இழிவுபடுத்தும் இத்திரைப்படத்தை உலகெங்கும் திரையிட்டு தமிழர்களின் நிதியை அபகரிப்பதோடு தமிழர்க்கெதிரான சூழ்ச்சியான இழி கருத்தையும் வஞ்சகத்தோடு விதைக்கும் வஞ்சனையோடு உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

இந்த திரைப்படத்தை வன்மையாக கண்டித்து எமது எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டத்தில் தொடர்ந்தும் அணிதிரள்வோம் !

மெட்ராஸ் கபே திரைப்படத்தை புறக்கணித்த அனைவருக்கும் நன்றி… வைகோ

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடாததற்கு நன்றி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ் இனப்படுகொலை செய்த கூட்டுக்குற்றவாளிகள் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்ள சிங்கள பேரினவாத அரசின் பேருதவியுடன் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட “மெட்ராஸ் கபே” திரைப்படம் வெளியிடக்கூடாது என கொந்தளிக்கும் உணர்வுடன் விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று (23.08.2013) வெளியிடுவதாக இருந்த திரைப்படம் திரையிடப்படவில்லை.

தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் இப்படத்தை திரையிட இயக்குனரும், தயாரிப்பாளரும் பலவகையில் முயற்சி செய்து இலாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறின.அப்படிப்பட்ட நிலையிலும் தமிழர்களின் உரிமைகளுக்காக சுயநலமின்றி போராடும் எங்களின் வேண்டுகோளை ஏற்று தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து “மெட்ராஸ் கபே” திரைப்படத்தை திரையிடாமல் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையுலத்தினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.