இந்த வாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புஉரிமை நாடுகளை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது கனடா, நோர்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை தாம் புறக்கணித்ததாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

நாம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது, அவர்கள் எதிர்காலத்தில் எம்முடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடம் என சிறீலங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு ஆதரவாக நடக்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகள் சார்பில் போட்டியிட்ட இந்தியாவிற்கும், ஆபிரிக்க நாடுகளில் கெனியாவிற்கும் வாக்களித்த சிறீலங்கா, மேற்கத்தைய உலகம் மற்றும் ஏனைய நாடுகள் சார்பில் இரண்டு உறுப்பினர்களின் தெரிவிற்குப் போட்டியிட்ட, கனடா, அயர்லாந்து மற்றும் நோர்வேயில் எந்தவொரு நாட்டிறற்கும் வாக்களிக்கவில்லை. இந்த நாடுகளில் இருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பிருந்தும், எந்தவொரு நாட்டிற்கும் வாக்களிக்காக ஒரே நாடும் சிறீலங்கா தான் என்பது, பொதுச்சபையில் பலரின் புருவத்தையும் வாக்களிப்பின் போது உயர்த்தவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here