யசூசி அகாசி : தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் சூத்திரதாரி

0
656

Mahi-akahiஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி தற்போது இலங்கையில் நிற்கிறார். தமிழின அழிப்புக்கு அனைத்துலக அங்கீகாரத்தை வேண்டி உலகெங்கும் பறந்து திரிந்தவர், தற்போது நடந்த இன அழிப்புக்கு வெள்ளையடிக்கவும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மறைக்கவும் களமிறங்கியுள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் முக்கியமான அலகாக அப்போது ஜப்பான் விளங்கியது.

அதன் விசேட துதுவராக இந்த யசூசி அகாசி இருந்தார். இவர் தற்போது தாயகப் பகுதிகளுக்கும் வருகை தர உள்ளார். எதையுமே கோணங்கித்தனமாக விளங்கிக் கொள்ளும் நமது தமிழ் ஊடகங்களும் தமிழ் அரசியல்வாதிகளும் அவரை ஒரு ஆபத்பாந்தவன் போல சித்தரிக்க முயலலாம். ஏனென்றால் கடந்த வருடம் இவர் வந்தபோது இந்த கூத்து நடந்தது. இது கொடுமையானது. எமது அழிவிற்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர்.

புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல்இ புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல்இ தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல்இ இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ” புரொஜக்ட பெக்கன்” என்ற தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் சூத்திரதாரிகளில் ஒருவர் இவர்.

இப்போது இவரிடம் போய் தீர்வை கேட்பதும்இ நமது குறைகளை சொல்லி அழுவதும் கொலைகாரனிடம் நீதி கேட்பதற்கு ஒப்பானது.. நமது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இன்னும் படிப்பதற்கு நிறைய இருக்கிறது.

மதரீதியான உடன்பாடுகளும் , வியாபார ஒப்பந்தங்களும் சிங்களத்தை ஜப்பானுடன் பிணைத்து வைத்திருக்கிறது. தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் களமிறங்கிய மேற்குலகம் தாம் விலகிநிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மேற்படி ஜப்பான் – சிங்கள நலன்கள் அடிப்படையில் இந்த யசூசி அகாசியை களம் இறக்கியது.

தற்போது மேற்குலகம் தமது நலன்களுக்காக சிங்களத்தை நெருக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் சிங்களம் இந்த எதிர்ப்பை எதிர்கொள்ள அல்லது நீர்த்துபோக செய்ய பல காய்களை நகர்த்த தொடங்கியிருக்கிறது.

இந்த இடத்தில்தான் இந்த யசூசி அகாசி முக்கியத்துவம் பெறுகிறார். சிங்களத்திற்காக மேற்குலகுடன் சமரசம் பேசக்கூடிய ஒருவராகவும், வியாபார நலன்களுக்காக அனைத்துலக மட்டத்தில் சிங்களத்தை காக்க கூடிய ஒருவாராகவும் இவர் இருக்கிறார்.

புல்மோட்டையிலுள்ள இல்மனைட் தாதுமணல் ஜப்பானுக்கு சமாதான காலத்திலேயே தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இப்படி நிறைய கதைகள் இருக்கின்றன.

எனவே நமது ஊடகங்களும் தமிழ் அரசியல்வாதிகளும் இவற்றை எல்லாம் வெளிக்கொணர வேண்டும். அல்லது அதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இவர் போன்றவர்களை ஒரு ஆபத்பாந்தவன் போல சித்திரிக்கும் அபத்தத்தையாவது நிறுத்தி கொள்ளலாம். புண்ணியம் கிடைக்கும்.

ஈழம்ஈநியூஸ்.