ஐநா விசாரணைக்குழுவை நவிபிள்ளை அறிவித்ததும், அதிலிருந்து தப்புவதற்காகவும் நடந்த இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கவும் சிங்களம் தமக்கு சார்பான பிரதிநிதிகளை கொண்ட ஒரு அனைத்துலக விசாரணைக்குழுவை அறிவித்ததை அறிந்திருப்பீர்கள்.

தற்போது அந்த குழுவில் இந்தியாவிலிருந்து “மனித உரிமையாளர்” என்ற பெயரில் வலம் வரும் மகிந்தவின் நீண்டகால நண்பர் அவ்தாஷ் கௌஷல் இணைக்கப்பட்டிருக்கிறார்.

pillain
இனஅழிப்புக்கு வெள்ளையடித்து சிங்களத்துடன் இணைந்து தமிழ் மக்களை ஒடுக்க மோடி அரசு தயாராகிவிட்டதையே இது உறுதி செய்கிறது.

ஆனால் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் இன்று ” தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும், இது தனிப்பட்ட அழைப்பு” என்றும்; அறிவித்திருக்கிறது.

ஆனால் நேற்று அவ்தாஷ் கௌஷல் பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தன்னை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு இதை உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்பே மகிந்த ராஜபக்ச தன்னிடம் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டதாகவும் கூறியிருக்கிறார்.

யாருக்கு கயிறு விடுகிறது இந்திய அரசு?

“புலிகள் தான் பிரச்சினை, புலிகளை அழித்து விட்டு தங்கத்தாம்பாளத்தில தீர்வு தருகிறோம்” என்று கூறிய இந்தியா, இன்று தமிழனை தமிழனாக இல்லை ஒரு சக மனிதனாகக்கூட இலங்கையில் வாழ விடுவதற்குத் தயாராக இல்லை.

பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை, கோயில் குளத்திலிருந்து வயல் நிலம் மண்ல் மேடு வரை முழுத்தாயகமும் சுரண்டபட்டு சிங்களமயமாகிவருகிறது.

கேட்க எந்த நாதியுமில்லை.

ஆனால் இன்னும் “இந்தியாவை நம்பு. அமெரிக்காவை நம்பு.” என்று சொல்வதற்கு நமக்குள்ளேயே ஒரு கூட்டம் இருக்கிறது.

போராடினால்தான் வாழ்வு என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

நன்றி : ஈழம்ஈநியூஸ்.