யாழ்ப்பாணம் வல்லிபுரம் புலோலி பகுதியினைச் சேர்ந்த,செல்வி.யுலக்சனா யோகா என்னும் பெயருடைய சிறுமி கடந்த 6 வருட காலமாக தொண்டைப்பகுதியில் புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்திய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவருக்கு இரண்டுதடவைகள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டிகளை அகற்றினர்.

cancer-girl
அதன் பின்னர் தொண்டைப்பகுதியில் துவாரம் இட்டு அதனாலேயே சிறுமி சுவாசிப்பதற்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில் தொடர்ந்து கிளினிக் சென்று வரும் சிறுமிக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்-தெரிவிக்கப்படுகின்றது.

பன்னிரெண்டு வயதாகும் சிறுமிக்கு தற்போது சுவாசக்குளாய் விரிவடையவில்லை என்றும் அவசரமாக சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.

வறுமையில் வாடும் இச்சிறுமியின் தந்தையோ நாட்கூலி வேலை செய்தே குடும்பத்தைக் காப்பாற்றுவதாகவும்-உடனடியாக சிறுமிக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு தம்மிடம் வசதியில்லையென்று என்று சிறுமியை வீட்டில் வைத்து பராமரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்கள் நகருமானால் இச்சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது.

மற்றவர் துன்பத்தில் பங்கு கொள்ளும் கருணை உள்ளம் படைத்தவர்களே! இவர்களிடம் 0094779672133 என்ற இலக்கத்துடன் பேசுங்கள்!

இவருக்கு மனதால் உதவ விரும்பினால் -அல்லையூர் இணையத்தின் ஊடாகவும் நீங்கள் உதவலாம்.
தொடர்புகளுக்கு**0033651071652