சிறீலங்காவில் போர் நிறைவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ளதாக உலக நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் தற்போதும் அடிமை வாழ்வையும், போர்ச் சூழலையுமே வடக்கு கிழக்கில் எதிர்நோக்கியுள்ளனர்.

 
ஒரு இலட்ச்த்திற்கு மேற்பட்ட சிங்களப் படையினரின் பாதுகாப்புடன் இயங்கும் வழிப்பறிக் கொள்ளைக்கும்பல்களும், வாள் வெட்டுக்குழுக்களும் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்துவரும் அதே சமயம், போர் இடம்பெற்றபோது கைது செய்யப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களை எந்தவித விசாரணைகளுமின்றி தடுத்து வைத்துள்ள சிங்கள அரசு அவர்களின் விடுதலை புறக்கணித்தும் வருகின்றது.

 
அகற்றப்படாத பயங்கரவாதத்தடைச்சட்டம், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்தவிகாரைகள் அமைத்தல் என சிங்கள அரசு மேற்கொண்டுவரும் எந்த இனச்சுத்திகரிப்பு நகர்வையும் மேற்குலகமோ அல்லது அனைத்துலக சமூகமோ தடுக்காது அதனை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன.

 
விடுதலைப்புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் அனைத்துலக சமூகம் தமிழ் இனஅழிப்பையே மேற்கொண்டதாகவே தற்போது நாம் நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

 
போர் நிறைவடைந்த பின்னர் இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் சிறைகளில் உள்ள தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக சிங்கள அரசின் திட்டங்களுக்கும், வாரவு செலவுத்திட்டங்களுக்கும் ஆதரவழித்து அதன் இனஅழிப்புக்கு மறைமுகமாக துணைபோகின்றது.

 
எனவே தான் தற்போது அனுராதபுரம் சிறையில் உண்ணாநோம்பை மேற்கொண்டுவரும் அப்பாவித் தமிழ்க் கைதிகளுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

 
இந்த மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறவேண்டும், சிங்கள தேசத்தையும், தமிழினவிரோத இந்திய தேசத்தையும், அனைத்துலக சமூகத்தையும் உலுப்பவேண்டும், இந்த போராட்டம் தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கான போராட்டம் எனவே உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் அனைவரும் தமது பங்களிப்பை வழங்கவேண்டும்.

 
தமிழக பல்கலைக்கழகங்களும், உலகம் எங்கும் தமிழ் மாணவர்கள் கல்விகற்கும் பல்கலைக்கழகங்களும் இந்த போராட்டத்தினுள் உள்வாங்கப்படவேண்டும்.

 
அரசியல்வாதிகளை புறம் தள்ளுங்கள் அவர்களை தொலைவில் வைத்திருங்கள். அவர்கள் உள்வாங்கப்பட்டால் போராட்டத்தை தமது அற்ப நலன்களுக்காக தோல்வியடையச் செய்துவிடுவார்கள்.

 
இந்த மாணவர் போராட்டத்தில் மக்களும் இணைந்து கொள்ளுங்கள், மேற்குலகத்தை மட்டும் சுற்றிவராமல் உலகின் அனைத்து நாடுகளிடமும் நீதி கேளுங்கள், அது சீனா என்றாலும் ரஸ்யா என்றாலும் பரவாயில்லை.

 
இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் உலகம் எங்கும் எதிரொலிக்க வேண்டும் அதற்கான ஆதரவை உலகத் தமிழ் மக்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றது ஈழம் ஈ நியூஸ். இந்த தகவலை எல்லோருக்கும் தெரிவியுங்கள் போராட்டத்திற்கு அதரவுகளை வழங்குங்கள்.

 
ஈழம் ஈ நியூஸ்.