jaffna-uni-2016-2யாழ்.மருத்துவ பீடத்தின் புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

 

இன்றைய தினம் புகுமுக மாணவ ர்கள் வரவேற்பு நிகழ்வில் கண்டி ய நடனம் இடம்பெற வேண்டும் என சிங்கள மாணவர்கள் கேட்ட நிலையில் இந்த கைகலப்பு உருவான நிலையில் பெரும் மோதலாக அது மாறியது.

 

இந்நிலையில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடனும் மாணவர்கள் கடுமையாக முரண்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களை தூசண வார்த்தைகளால் சிங்கள மாணவர்கள் பேசியுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற் பு நிகழ்வில்மாணவர்களுக்கிடை யில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறையற்றவகையில் மூடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.

 

மேற்படி, விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில் விடுதிகளில் உள்ள விஞ்ஞான பீட சிங்கள மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அவர்கூறியுள்ளார்.

 

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பொலிஸ்புலனாய்வாளர்களின் துணையுடன் சிங்கள மாணவர்க ள் தமிழ் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ் மாணவர்கள் கூறியுள்ளனர்.