பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளினில் அரசியல் தலையீடு மற்றும் இராணுவ தரப்பால் வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சிக்கென கூறி நிதி முடக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கவனவீர்ப்பு போராட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர்.

ju-2014-dec
இன்று முற்பகல் 11 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வாயிலில் ஒன்று கூடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு, கல்விக்கான நிதி ஓதுக்கீடு அதிகரிப்பு, உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் குறிப்பிட்ட நேரம் முற்றாக தடைப்பட்டிருந்தது.

JU-Dec-2014
ஏற்கனவே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகளை சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பினை பெரும்பாலான தரப்புக்கள் அண்மையினில் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.