யுத்தத்தின் பின்னரான காலத்தில் யாழ். பல்கலைக்கழகம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதற்கான நல்வாய்ப்பக்களைக் கொண்டிருந்தது. இயங்கமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த யுத்த காலத்தின் பின்னர் இன்று அனைத்து சமூக மாணவர்களும் இப் பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர். இவர்களின் கல்வி மீதான நாட்டம் அதிகரித்துள்ளதோடு நூலகப் பாவனையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இம் மாணவர்களின் உழைப்பிற்கு பொருத்தமான தகுதியை வழங்கக்கூடியவாறான கல்விச்சூழலையும், நேர்மையான நிர்வாகத்துக்கான நம்பிக்கையையும் வழங்குவதே தற்போதைய சவாலாகவுள்ளது. ஆனால் 1970 களிலும் 1980 களின் முன்பகுதிகளிலும் இப் பல்கலைக்கழகம் கொண்டிருந்த தரத்துக்கு மீள எழும் என்னும் நம்பிக்கையை தகர்க்கும் வகையிலான பயமுறுத்தல்களையும், தலையீடுகளையுமே நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மே 18ஆம் திகதியன்று வரும் யுத்தமுடிவின் நினைவுகூரலுடன் தொடர்பான சம்பவங்கள் மே 5 இலிருந்து அடுத்தடுத்து அரங்கேறின. எவ்வித காரணங்களும் தராமல் பல்கலைக்கழகமானது 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை மூடப்படுகின்றது என்ற அறிவித்தலை பதிவாளர் வெளியிட்டார். பயங்கரவாதத்துக்கு துணைபோவதாகக் குற்றம் சாட்டி சில பேராசிரியர்களுக்கும், மாணவ தலைவர்களுக்கும் மரண அச்சுறுத்தலை விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள், மே 7 ஆம் நாளன்று வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தன.

Uni-sci-2
கலைப்பீட மற்றும் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியங்களின் தலைவர்களதும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரதும் பெயர்கள் மட்டுமே மேற்படி பிரசுரத்தில் காணப்பட்ட மாணவர் பெயர்களாகும். கலைப்பீடாதிபதியான பேராசிரியர் சிவநாதனும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரான திரு இராசகுமாரனுமே பெயர் குறிப்பிடப்பட்ட இரு கல்வியாளர்களாவர்.

அதே தினத்தில் மே 8 ஆம் திகதி (அதாவது அடுத்த நாள்) ஒரு கலந்துரையாடலுக்கு வருமாறு மேஜர் ஜெனரல் உதய பெரெரா பல்கலைக்கழக நிர்வாகிகளான துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அங்கு பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஆடல், பாடல், விருந்துகளுடன் அனைவருக்கும் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் ஜெனரல் பெரெரா பல்கலைக்கழகத்தில் மே 18 அன்று எந்தவித நினைவுகூரல்களும் அனுமதிக்கப்படமாட்டாது என மிக நாசுக்காக அறிவித்தார்.

அவ்வாறான நினைவுகூரல்கள் பிரபாகரனுக்கானதாக அமையுமெனவும் எனவே அது பயங்கரவாதத்துக்கு துணைபோவதாகக் கருதப்படுமெனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பொலிஸ் அத்தியட்சகர் ‘கறுப்புக் கொடியேற்றவோ, துண்டுப்பிரசுரம் வினியோகிக்கவோ அன்றேல் சுவரொட்டி ஒட்டவோ முனையும் எவரும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கருதப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி காவலில் வைக்கப்படுவர்’ என மே 11 ஆம் திகதிய ளுரனெயல வுiஅநள பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

ஒருதரப்பு மாத்திரம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டிராத அந்த யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும்இ யுத்தம் பற்றி தமிழர் கதைப்பது ஆபத்தான விடயமாகக் கருதப்படுவது ஏன்? இதற்கான விடை சுதந்திரம் அடைந்ததிலிருந்து தொடரும் தேசியப் பிரச்சினைக்கு வேண்டப்படும் அரசியல் தீர்வுக்கான சாத்தியப்பாடு குறைந்து கொண்டே போவதால் ஓன்றுக்கொன்று எதிரான திசைகளில் வளரும் கருத்துக்களுடன் தொடர்புபட்டது. இந்த வேளையில் இதே நாளை யுத்த வெற்றியின் நினைவாக தன்னை இதன் நாயகர்களாக ஆக்கி அரசாங்கம் பெரும் ஆரவாரத்துடன் மாத்தறையில் கொண்டாடவுள்ளது என்பதை மறக்காதீர்கள்.

சிங்களமக்கள் தன்னைச் சங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்பதைத் தவிர்த்துக் கொள்வதற்காகவா அரசு பயங்கரவாத மீளெழுச்சி என்ற பூச்சாண்டியைக் காட்டுகின்றது?

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மடிந்து போனஇ இளையோரும் முதியோருமான ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை தமிழ் மக்கள் நினைவுகூருவது ஏன் தடுக்கப்படுகிறது? அப்போது அவர்கள் சிதறுண்டிருந்தனர்ளூ அநேகமானோர் குடும்பங்களைப் பிரிந்திருந்தனர்ளூ அவர்களின் அன்புக்குரியவர்கள் துக்கமனுஷ்டிக்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் உயிரிழந்திருந்தார்கள். இறந்தவர்கள் தமது உறவினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அகால மரணமடைந்த பெரும் எண்ணிக்கையான தமது சமூக உறுப்பினர்களுக்கு ஒன்று சேர்ந்து துக்கமனுஷ்டிக்கும் உரிமை தமிழர்களுக்கு இருக்கவேண்டும். சிங்கள மக்கள் மரணித்த ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களை நினைவுகூரும்போது இத்தகைய அடக்குமுறைகளுக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதில்லையே!

யுத்தத்தினை அரசியல் மோசடிக்காக அரசாங்கம் பயன்படுத்த எண்ணும் போது, தமது நிலங்களும் அடையாளங்களும் சிங்களமயப்படுத்தப்படுவதால் ஏற்படும் அவமதிப்பும் நம்பிக்கையீனமும், யுத்த இறுதி மாதங்களில் ஏற்பட்ட பாரிய மனித அவலங்களை மூடி மறைக்கும் செயலும், டுவுவுநு ஆனது தங்களைக் கேடயமாக வைத்திருந்த கோபத்திற்கும் அப்பால்; அரசின் நோக்கத்திற்கு எதிர்மாறாக டுவுவுநு ஐ நோக்கிய வெளிப்படுத்தப்படாத ஒரு நாட்டத்தை மக்களுக்குக் கொண்டுவரும்.

இப் போரானது எமது வரலாற்றின் ஒரு பகுதி. இதன் முடிவைப்பற்றி மட்டுமல்லாது முடிவிற்கு முன்னர் இப்போரை மூனறு தசாப்தங்களாக தொடரச்செய்த அனைத்து பகுதியினரதும் சீர்கெட்ட அரசியல் பற்றியும், முடிவிற்குப் பின்னரும் இனி வரும் காலத்திற்கும் எங்களைப் பாகுபாடென்னும் சேற்றில் அமிழ்த்தச் சதி செய்பவர்கள் பற்றியும் நாம் வெளிப்படையாகப் பேசவேண்டும். இது போன்ற விடயங்களில் சமூகத்துக்கு வழி காட்டவேண்டியது பல்கலைக்கழகமே. ஆனால் நிர்வாகிகள் அடக்குமுறையைப் பயன்படுத்தி, தமக்கு வேண்டாதவர்களை அகற்றும், அரசியல்மயப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத்தால் கௌரவத்துடன் கூடிய சமூக நல்லிணக்கத்திற்கு பங்களிப்பு வழங்க முடியாது. பல்கலைக்கழகம் மூடப்பட்ட முறையே இதற்குச் சான்றாகவுள்ளது.

மேற்படி பல்கலைக்கழக மூடல் தொடர்பான அறிவித்தலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் துணைவேந்தரும் பதிவாளருமாவர். ஆனாலும் இவர்கள் இதற்கான பொறுப்பினை ஏற்காததுடன் இதற்குப் பதிலளிப்பதிலிருந்தும் நழுவியுள்ளனர். கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவநாதன் LTT யின் மீள்வருகைக்கு துணைபோவதாக சுரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நாகரீகமற்ற பயமுறுத்தலை பேரவையும் பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டித்திருக்க வேண்டும். அண்மைக்கால தவறான நியமனங்களை பேரவையில் கண்டித்திருந்த ஒரே நபர் கலைப்பீடாதிபதியே.

பேச்சுச் சுதந்திரத்திற்கும் விவாதிப்பதற்குமான பாதுகாப்பான இடமாக பல்கலைக்கழகம் இல்லாதுவிடின், விரிவுரையாளர்கள் தாமறிந்த உண்மைகளை கற்பிக்க அஞ்சுவார்களாயின் மாணவர்கள் விரிவுரைகளுக்கு வர அஞ்சுவார்களாயின், புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தமது கல்வியை தொடரமுடியாது தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டோ அல்லது தகவல் தருபவர்களாகவோ பாவிக்கப்படுவார்களாயின்; நாங்கள் எமது இளையோர்களுக்கான வளமான எதிர்காலத்துக்கான வாய்ப்புக்களை மறுப்பது மாத்திரமன்றி இலங்கையர் அனைவரதும் வளமான அமைதியான எதிர்காலத்தினையும் பாழடிக்கின்றோம்.

அடக்குமுறை மற்றும் பயமுறுத்தல் ஊடாக சமூகத்தினை பணிந்துபோகவும் மௌனிக்கவும் செய்யலாம். ஆனாலும் உண்மை இங்கு தொலைந்துபோகின்றது. விஞ்ஞானரீதியான ஆய்வுகளுக்கும்இ ஞானத்தேடல் எல்லாவற்றிற்குமான அடிநாதமாக விளங்குவது உண்மை. உண்மை தொலைந்துபோனதொரு சூழலில் பல்கலைக்கழகத்தால் உண்மையானதொரு பல்கலைக்கழகமாக செயற்படமுடியாது.

தங்கள் உண்மையுள்ள,

கலாநிதி ஜெ. பி. ஜெயதேவன்,
தலைவர்
யாழ். பல்கலைக்கழக
விஞ்ஞான ஆசிரியர் சங்கம்.