யேர்மனியில் ஆலன்,பேர்லின் மற்றும் எஸ்சேன் நகரில் 26 .12 .2014 நேற்றைய தினம் மதியம் ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முனெடுக்கப்பட்டது.

aalen3
ஆலன் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை முடிவில் அனைவரும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு சுடர் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர் .அங்கு ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினர் .இறுதியாக கொல்லப்பட்ட மக்களை நினைவில் நிறுத்தி அவர்களுக்கான பிரார்த்தனையை மதகுரு Bernhard Richter அவர்கள் மேற்கொண்டார்.

essen tsunami2 2014
பேர்லின் நகரத்தில் தேவாலயத்தில் ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்று இறுதியாக கொல்லப்பட்ட மக்களின் நினைவுத்தூபிக்கு மலர் மற்றும் சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது. இவ் நிகழ்வில் ஆழிப்பேரலையால் கொல்லப்பட்ட யேர்மன் மக்களின் உறவுகள் கலந்துகொண்டு தமது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். தமிழ் மக்களும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

Essen நகரில் ஒன்றுகூடிய மக்கள் ஆழிப்பேரலையால் கொல்லப்பட்ட மக்களை நினைவில் நிறுத்தி அங்கு உள்ள நினைவுத் தூபிக்கு சுடர்வணக்கம் செலுத்தி வணங்கிசென்றனர்.

காணொளி :Berlin
யேர்மனிய தொலைக்காட்சியின் RBB வின் நிகழ்வுத்தொகுப்பு
http://www.rbb-online.de/abendschau/archiv/20141226_1930/10-jahre-tsunami.html

காணொளி :Aalen
http://youtu.be/KUgy7hUc6Pw

ஈழத்தமிழர் மக்கள் அவை -யேர்மனி