யேர்மனியில் வீரத்தமிழ்மகன் செந்தில்குமரன் வணக்கநிகழ்வு

0
671

senthil-1புலம்பெயர்ந்து சுவிஸ் மண்ணில் வாழ்ந்த பொழுதும் தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக தீக்குளித்து இறந்துள்ளார்.

வீரத்தமிழ்மகன் செந்தில்குமரன் அவர்களின் வணக்க நிகழ்வுகள் யேர்மனியில் குறிகிய நாட்களில் பல்வேறு நகரங்களில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
Bad Friedrichshall, Berlin, Göttingen, Landau Mönchengladbach ஆகிய நகரங்களில் மக்கள் கலந்துகொண்டு வீரத்தமிழ்மகன்
செந்தில்குமரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு எதிர்வரும் 16.09.2013 அன்று இனவழிப்பிற்கு நீதி கேட்பதற்காக சுவிஸில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை வளாகத்தின் முன்பாக மாபெரும் எழுச்சிப் போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அத்தோடு தமிழீழம் காணும் வரை தொடர்ந்து அயராது போராடுவோம் என உறுதி எடுக்கப்பட்டது.
senthil-9