கனடா ரொறன்ரோவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றது. கனடிய நேரப்படி நேற்றுக்காலை 7:05 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டு கனடியக் கொடி, தமிழர் தேசியக் கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின. தேசிய நினைவெழுச்சி அகவத்தினால் இன்றைய நிகழ்வுகள் நான்கு அமர்வுகளாக மார்க்கம் Fair Ground மைதானத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

Canada-1
கனடாவில் நேற்றைய நாள் நவம்பர் 27 அன்று மார்க்கம் நகரில் கனடிய தமிழ் மக்களின் தேசியக் கட்டமைப்பின் ஒரு அங்கமான அகவம் நடத்திய மாவீரர் நாளான “தேசிய நினைவெழுச்சி நாள் 2014” நிகழ்வானது Markham Fair ground திடலில் ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக பல்வேறு தடைகளையும் தாண்டி மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
பல்வேறு சூழ்ச்சிகள் குழப்பங்களை மக்களுக்கு திணித்து மக்கள் எழுச்சி முடக்கப்பட முனைந்த முயற்சிகள் அத்தனையும் தோற்றுப் போயின.

denmar
வல்லமை தரும் மாவீரத்தின் வலிமை என்ன என மீண்டும் ஒரு முறை கனடா வாழ் உணர்வுள்ள தமிழர்கள் நிரூபித்து காட்டியுள்ளார்கள்

நான்கு நிகழ்விலும் மக்கள் வருகை அரங்கை நிறைத்திருத்தாலும் நான்காவது நிகழ்வில் மண்டபம் கொள்ளா மக்கள் திரள் அலை அலையாக கடல் போல் திரண்டு வந்து வணக்கம் செலுத்திச் சென்ற காட்சி பார்க்க பார்க்க மிகுந்த எழுச்சியாக இருந்தது.

விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட வெப்பமூட்டப் பெற்ற கொட்டகை மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கிய நேர்த்தியை மாணவர்கள் சிறப்பாக ஒழுங்குவிதிகளோடு கையாண்டு இருந்தனர்.