றுவாண்டாவில் இனஅழிப்பில் ஈடுபட்ட அரசியல்வாதிக்கு ஆயுள்தண்டனை

0
1223

றுவாண்டாவில் 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனஅழிப்பில் 25>000 இற்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்வதற்கு கட்டளையிட்ட முன்னாள் அரசியல்வாதியான லடிஸ்லாஸ் நகன்ஸ்வாவுக்கு றுவண்டா நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது.

றுவாண்டாவின் தென் பகுதி நகரான நாகிசூ நகரத்தின் முன்னாள் நகரசபைத் தலைவரான நகன்ஸ்வாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு தன்சானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

ருற்சி இன மக்களுக்கு எதிராக றுவண்டாவில் இடம்பெற்ற இனஅழிப்பு, படுகொலைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த விசாரணைகளின் முடிவில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிமன்ற பேச்சாளர் ஹரிசன் முட்டாபசி கடந்த வியாழக்கிழமை (28) தெரிவித்திருந்தார்.

ருற்சி இனமக்கள் சுற்றிவளைக்கப்பட்டு அவர்களின் படையினரிடம் இருந்த ஆயுதங்களை அகற்றிய பின்னர் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.  1994 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற இந்த படுகொலைக்கான உத்தரவுகளை குற்றவாளி வழங்கியிருந்தார்.

றுவாண்டாவின் அருசா பகுதி நீதிமன்றமும்> நெதர்லாந்தின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமும் இணைந்து இந்த விசாரணையை மேற்கொண்டிருந்தன. றுவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் 800>000 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அங்கு இடம்பெற்ற உள்நாட்டு போரின் இறுதி 4 மாதங்களில் இது இடம்பெற்றிருந்தது.

எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக தாம் மேன்முறையீடு செய்யப்போவதாக நகன்ஸ்வாவின் சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார். சாட்சியமளித்தவர்களின் வாக்குமூலங்களில் குழப்பங்கள் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு காணொளி மூலம் வழங்கப்பட்டிருந்தது. நகன்ஸ்வா 2015 ஆம் ஆண்டு கொங்கோ குடியரசில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு அவர் றுவாண்டா அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இவர் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 5 மில்லியன் டொலர்கள் சன்மானம் தருவதாக அமெரிக்க அறிவித்திருந்தது. 25 வருடங்களாக தலைமறைவாக இருந்த பின்னர் கடந்த வாரம் பிரான்ஸ் இல் வைத்து மற்றுமொரு இனப்படுகொலையாளியான பெலிசின் கபோகா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போதைய தீர்ப்பு வெளிவந்துள்ளது.

செல்வந்த வர்த்தகரான இவர் இனப்படுகொலைக்கு நிதி உதவி வழங்கியதுடன்> அதற்கான தகவல்களையும் ஒளிபரப்பியிருந்தார். கைது செய்யப்பட்டவர் பிரான்ஸ் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை (27) முன்னிலைப்படுத்தப்பட்ட போதும், அவர் தனது குற்றங்களை மறுத்திருந்தார். எனினும் தன்னை ஆபிரிக்காவிற்கு நாடுகடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே> றுவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் அனைத்துலக குற்றிவியல் நீதிமன்ற விசாரணைக்கான பொறிமுறை கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் றுவாண்டாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் பாதுகாப்பு அமைச்சர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார்> மற்றயவர் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here