லண்டன் – பின்லாந்த்தில் காலவரையற்ற உண்ணாவிரம் தொடங்கியது

0
726

parameshஇலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள கொமன்வெலத் மாநாட்டிற்கு, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது என்னும் கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதி முன்பாக அவர் தனது உண்ணாவிரதத்தை திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்துள்ளார்.

2009ம் ஆண்டு இலங்கையில் போர் உக்கிரமடைந்த வேளை லண்டனில் பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்தார்.

அது பெரும் எழுச்சியாக உருவெடுத்தது. அதுபோல லண்டனில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஒன்று திரட்டி, பாரிய போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க இது மீண்டும் வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் சுமார் 4 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பல மாகாணங்களில், எம்.பீக்களை தெரிவு செய்வதில் அவர்கள் உதவி கட்சிகளுக்கு அவசியமாகிறது.

இந்நிலையில் டேவிட் கமரூன் அவர்கள் தமிழர்களைப் புறக்கணித்து இலங்கை செல்வது அவர் கட்சியின் செல்வாக்கை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமமாகும். தமிழர்கள் மத்தியில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இருந்து வந்த ஆதரவு குறையும் நிலை தோன்றியுள்ளது.

இவ்வேளை பரமேஸ்வரன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தால், அவர் இருக்கும் இடத்திற்கு பல தமிழர்கள் செல்வார்கள்.இதுவே பாரியதொரு போராட்டமாக வெடிக்கும். இதனையும் தாண்டி கமரூன் இலங்கை செல்ல முற்படுவாரா? இது பெரும் சவாலாக அமையும் விடயமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் இழுத்துவரும் அவலத்தை பார்த்த நாள் முதல் நான் உறங்கவில்லை, என்று தெரிவித்துள்ளார்.பரமேஸ்வரன். இப்படியான ஒரு நாட்டிற்கு கமரூன் செல்வதா? அங்கே நடந்த கொடுமைகளுக்கு நீதி தேவை, எனவே நான் நிச்சயம் உண்ணாவிரதம் இருப்பேன்.

என்னால் முடிந்த போராட்டத்தை மன உறுதியோடு தொடருவேன் என்று பரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். லண்டனில் நிலவும் கால நிலை பற்றி நாம் அனைவரும் அறிவோம். எனவே பரமேஸ்வரனுக்கு தோழ் கொடுக்க அனைவரும் அங்கே அணி திரளுவோம்.
kannan
இதனிடையே பின்லாந்த் நாட்டில் இன்னும் சில மணிநேரங்களில் “கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது” என்று வலியுறுத்தி சுரேஸ் கண்ணன் என்ற ஈழத்தமிழர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

பின்லாந்தில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இடம் :- British Embassy Helsinki
Itäinen Puistotie 17
00140 Helsinki
Finland