லைக்கா நிறுவனத்தின் தலைவரது சூழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்ட இரண்டு பிரித்தானிய செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா அண்மையில் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

எனினும் அவர் கத்தி திரைப்படத்தை தயாரித்தமைக்காக தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக இவ்வாறு போலியான செய்தியை பரப்பியதாக பின்னர் குறித்த இரண்டு இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த செய்தியின் மூலம் மகிந்தராஜபக்சவுக்கும், தமக்கும் தொடர்புகள் இல்லை என்று மக்களை நம்ப வைக்க அவர் முயற்சித்துள்ளார்.

lycaaஎனினும் இதன் உண்மை பின்னணியை வெளியிட்டமைக்கு குறித்த இரண்டு இணைத்தளங்களும் “டீடொஸ்” முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: பதிவு.