வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு உதவியளிக்கும் செயற்றிட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக துறைசார் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

இந்த செயற்றிட்டம் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

கடந்த 2014ம் ஆண்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது அமைச்சர் குறித்த திட்டத்தினை முன்மொழிந்திருந்தார்.

 

குறித்த செயற்றிட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இந்த வகையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றில் நாளைய தினம் தொடக்கம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். குறித்த விண்ணப் பபடிவங்கள் முழுமையாக தமிழில் இடம்பெற்றிருப்பதனால் அனைவரும் அதனை இலகுவாக பயன்படுத்த முடியும்.

 

அவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் விண்ணப்ப படிவத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

 

Email ministerfisheriesmedia@gmail.com