முகநூலின் ஒரு விவாதத்ததில் ஒரு கருத்தை பார்த்தேன்.

 

“அறவழியில் போராடிய மாணவர்களை வன்முறை மூலம் அட்க்கியதால் இனி ஆயுதப்பேராட்டம்தான் தீர்வு ” என்று ஒருத்தர் பகிர்ந்த கருத்துக்கு பலர் வந்து நக்கலடித்து கொண்டிருந்தார்கள். பாவம் அவர் திணறிக்கொண்டிருந்தார்.

 

சரிஅவருக்கு ஆதரவாக ஒரு பதிலை எழுதுவோம் என்பதற்குள் நக்கல், நையாண்டியை தாங்க முடியாமல் அவர் பதிவை அழித்து விட்டார்.

 

நேரடி ஆயுதப்பேராட்டம் சாத்தியமில்லை என்பது உண்மைதான்.

 

ஆனால் சீனப்புரட்சியின்போதும் அதற்கு பின்னான பல உலக போராட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட “தற்காப்பு மக்கள் யுத்தம்” என்ற அரசியல் இராணுவ தந்திரோபாயத்தை மறுதலிக்க முடியாது..

 

ஈழத்தில் கூட 2009 இற்கு பிறகு நாம் இந்த வகையான ஒரு வழிமுறை ஒன்றையே எதிர்வு கூறுகிறோம்.

 

தமிழகத்தில் மாணவர்கள் மீதும் அவர்களுக்கு அடைக்கலம் தந்த கடலோர மக்கள் மீதும் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் இதையே எமக்கு போதிக்கிறது.

 

மே 18 இல் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையை வைத்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில ஒரு பொது புத்தியாக ஆயுதப் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்ற கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

 

இது சிங்களத்தின் சதி மட்டுமல்ல இனஅழிப்புக்கு துணைநின்று தமிழீழ விடுதலைக்கு எதிராக இயங்கும் மேற்குலக மற்றும் பிராந்திய சதிகளின் ஒரு பகுதியுமாகும்.

 

ஆயுதம் தரித்த மக்கள் திரள் போராட்டம், பேராளிகளின் புரட்சிகர வன்முறை போராட்டம் என்ற கோட்பாடுகள் என்பவற்றை நாம் தட்டையாக புரிந்து கொண்டதன் விளைவே நாம் ஆயுத போராட்டத்தில் முழுமையாக நம்பிக்கை இழந்ததும் அது குறித்து பேசுவதே குற்றம் என்ற பொதுப புத்திக்குள் நாம் எம்மை புதைத்துக்கொண்டதுமாகும்.

 

இங்கு ஆயுதப் போராட்டம் ஏன் தேவையான ஒன்று என்பதை மக்கள் சார்ந்த நோக்கிலிருந்தே நோக்க வேண்டும். மக்கள் போராடுவதும் அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும், அது ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமாக பரிணாமம் பெறுவதும் போராட்டம் ஒன்றின் இயல்பான வளார்ச்சிப்போக்காகும்.

 

அதன் விளைவாக உருவாகும் அரசியல் தலைமை ஒன்று தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்ச்சிப் போக்காகும். எனவே மக்கள் போராட்டத்திற்கு எதிரான உள்ளக – வெளியக சக்திகளின் குரலே ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்று ஒலிக்கின்றது.

 

அடுத்து அந்த பின்னூட்டத்தில் ஒருவர் மணிப்பூர், நாகலாந்து,அசாம், காஸ்மீர் போன்ற இடங்களில் ஆயுதப் போரட்டத்தை இந்திய இராணுவம் எப்படி அடக்கி வருகிறது என்றும் தமிழகத்தில் அது கனவில் கூட சாத்தியமில்லை என்றும் பதிலிறுத்திருந்தார்.

 

நாம் ஈழத்தில் இதுவரை வரலாறு காணாத ஒரு ஆயுதப் பேராட்டத்தை நடத்தியவர்கள். அது தந்த வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட எமக்கு ஒரு முன்னுதாரணமாக – வழிகாட்டியாக நம்முன் கிடக்கிறது.

 

அதை அப்படியே கிரகித்தவர்களில் பல இலட்சக்கணக்கான தமிழகத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

 

2 நாட்களுக்கு முன்பு சீமான், தரைப் பாதையை காவல்துறை தடை செய்ததும் மாணவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவ பொருட்களை கொண்டு கடல் வழியாக ஊடறுத்துபோக முடிவெடுத்தது ஈழப்போர் கற்றுதந்த பாடம்.

 

உலக வல்லரசுகளையே அதிர்ச்சிக்குள் தள்ளி குடாரப்பில் சில நூறு பேராளிகளுடன் தரையிறங்கிய பிரிகேடியர் பாலராஜ் 30 நாட்களுக்கு மேல் உலக வல்லரசுகளின் படைஅதிகாரிகளையே மண்டியிட வைத்த வரலாற்றிலிருந்து கற்ற பாடம் அது.

 

மருந்து மற்றும் உணவு பொருட்:களை கொண்டு சேர்த்த ஒருத்தருக்கு அந்த மக்களுக்கான ஆயுதங்களை கொண்டு சோக்க எவ்வளவு நேரமாகும்.?

 

எனவே வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழகத்தை எடைபோடுவது இந்த விடயத்தில் தவறு.

 

அதற்காக தமிழகத்தில் ஆயதப் பேராட்டம் வெடிக்கும் என்று நான் சொல்ல வரவில்லை. – அப்படி எதுவும் நடைபெறாது என்பதும் எனது கணிப்பு.

 

ஆனால் வன்முறையுடன் கூடிய மக்கள் திரள் பேராட்டம் ஒன்றிற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது.

 

இந்திய அரச பயங்கரவாதத்தின் நிகழ்ச்சி நிரலை பொறுத்தே இதற்கான விடையை வரலாறு பதிவு செய்யும்.