வயலூர் கிராமப் படுகொலை தமிழின அழிப்புக்களை பறைசாற்றுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி. கலையரசன் தெரிவித்தார்

kalaiyarasan-tnaஅம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் ஆட்சியாளர்களினால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்;த அடையாளமே இல்லாமல் போன வரிசையில் வயலூர் கிராமமும் ஒன்றாகும்.

தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முதல் முதல் விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்த சமாதான ‘திம்பு’ பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வெளியுலகிற்கு வெளிவராது போன வரிசையில் வயலூர் கிராம படுகொலையும் ஒன்றாகும்.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சாகாமத்தில் இருந்து 8 மைல் தொலைவிலிருந்த வயலூர் கிராமம் 1972 ஆம் ஆண்டு காணியற்ற வறிய மக்களை குடியமர்த்தப்பட்ட ஒரு கொலனியாக இருந்தது.

இக் கிராமத்தை கடந்த 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான யுத்த நிறுத்தத்தின் போது 40 அப்பாவி விவசாயிகள் குமரன் குளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிராமமே சுடுகாடாக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை 29 வருட நிறைவு தினத்தையிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பின் ரி. கலையரசன் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி விவசாயிகளை நினைவு கூர்ந்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஒரு நாட்டில் அரசாங்கம் மூன்று விடயங்களை அர்த்தப்படுத்தும் சட்ட ஆட்சியை தக்கவைக்க ஒரு கடமையை கொண்டுள்ளது.

அதில் முதலாவதாக சட்டத்தை மீறினாலன்றி எவரும் தண்டிக்கப்படவோ, உடைமை இழக்கப்படவோ, தன்னிச்சையாக ஒரு மனிதன் தண்டிக்கப்படலாகாது. இரண்டாவதாக எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை. இதன் அர்த்தம் என்னவெனில் கீழ்நிலையிருந்து மேல் நிலைவரை பதவிவகிக்கும் எவரும் சட்ட நியாயப்படுத்தலின்றி அவர் செய்யும் செயலுக்கு பொறுப்புக் கூறவேண்டும்.

இக் கோட்பாட்டின்படி சட்ட அதிகாரியாக இருந்தாலும் அவர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவதை சட்டம் வற்புறுத்துகிறது. அத்துடன், சட்ட அதிகாரமின்றி தமது உத்தியோகபூர்வ இயலாமையை மிதமிஞ்சி தனிப்பட்ட முறையில் செய்யப்படும் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பெடுக்கப்படுகின்றனர்.

எந்தவொரு மனிதனின் தனிப்பட்ட சுதந்திரம் நீக்கப்படலாகாது. ஒழுக்க விழுமியங்களுடன் கல்வி, தொழில், பொருளாதார, அபிவிருத்தி, சுகாதாரம், சமூக முன்னோற்றம் என்ற வசதிகளைச் செய்து மக்கள் கௌரவமாக வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொடுப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் தமது பிரைஜைகளை பாதுகாக்க உரிமைகள், சலுகைகளை உருவாக்க வேண்டும் என்பதுடன், எல்லா உரிமைகளிலும் மிக அடிப்படையான உயிர் வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும்.

சகல உரிமைகளின் அதியுயர் கட்டமைப்பு இந்த உயிர் வாழ்வதற்கான உரிமையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. பிரஜைகள் உயிர்வாழ்வதற்காக இந்த உரிமையை பாதுகாப்பதில் அரசு முக்கிய பங்களிப்பை செய்யவேண்டுமென அரசியல் யாப்பு அதிகாரத்தில் வலியுறுத்துகின்றன.

இந்த முடிவின் அடிப்படையில் தான் தற்கொலை செய்வோரையும் அரசு தண்டிக்க முனைகிறது. ஒருவர் இன்னொருவரை கொலை செய்வதற்கு சட்ட ஆட்சி தடைசெய்கிறது.

தடையற்றவகையில் மனிதன் தனது வாழ்வை அனுபவிப்பதற்கு அவனது தனிப்பட்ட பாதுகாப்பு, உடல் ஆரோக்கிய பாதுகாப்புக்கான உரிமை அரசினால் வழங்கப்படவேண்டும். அப்பொழுதுதான் சட்டத்துக்குட்படும் நடவடிக்கைகள் தவிர்ந்து தாக்கப்படுதல், காயப்படுத்தப்படுதல், சிறையிலடைத்தல், ஆகியவற்றிலிருந்து பிரஜையொருவர் பாதிக்கப்படாமல் இருக்கமுடியும்.

இத்தகைய அடிப்படை உரிமைகள் எமது அரசியல் யாப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய அரசியல் ஏற்பாடுகள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை செயற்பாடுகளாக அவை மாற்றப்படவில்லை.

சமத்துவ உரிமைக்காக போராடும் ஒரு சமூகத்திற்கு அரசியல் ரீதியான ஒரு பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக இனப் படுகொலைகளை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்பது இந்த சமாதான யுத்த நிறுத்த திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே சுடகாடாக்கப்பட்டு இருந்த இடத்தின் அடையாளமே இல்லாது அழிக்கப்பட்ட வயலூர் கிராமம் சமாதானத்தின் போது அழிக்கப்பட்ட முதல் கிராமம் என்பது ஒரு சான்றாகும்.

இப்படுகொலை மனித சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு கொடூரமான தமிழர்களின் பூர்வீக கிராமங்களை ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமாகும். அதேவேளை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பின் உச்சக்கட்டமே சமாதனத்தின் போது படுகொலை செய்வது அன்று சமாதனத்தின் போது ஆரம்பித்த வயலூர் படுகொலை இன்று முள்ளிவாய்காலில் முற்றுப் பெற்றுள்ளது.

எனவே வயலூரில் படுகொலை செய்யப்பட்டு 29 வருடங்கள் சென்றாலும் ஒரு கறைபடிந்த படுகொலையாகும். இதில் உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்திப்போம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.