வரும் மார்ச் மாதத்தில் வரும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைதான் வேண்டும் ஏன்?

0
676

போர்குற்றத்திற்க்கான விசாரணையா அல்லது இனப்படுகொலைக்கான விசாரணையா என்பது இங்கு அவரவர் விருப்பம் சார்ந்தது பேசப்படுகிறது. அனால் நாம் என்ன கோரிக்கையை வைத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அது தீர்வை நோக்கி நகர்த்தும் என்பதை ஐநாவின் நடைமுறை விதியை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

may-17-geno
உதாரணமாக 1994ஆம் ஆண்டில் ருவாண்டாவில் துட்சி மக்கள் மீது அங்குள்ள இன்னொரு இனக்குழுவான ஊட்டு மக்கள் நடத்திய இனப்படுகொலைக்காக ஐநா அவையில் ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.அந்த தீர்ப்பாயத்திற்க்கு கொடுக்கப்பட்ட வேலையென்னவென்றால் மிகத்தெளிவாக சொன்னது இனப்படுகொலைக்கான விசாரணையை நடத்த வேண்டுமென்று 20ஆண்டுகள் ஆகியும் இன்றும் அது நடந்துக்கொண்டிருக்கிறது.

இதில் ருவாண்டாவில் வாழ்ந்த துட்சி மக்கள் தங்கள் மீது மீண்டும் ஊட்டு இனமக்கள் திரும்ப தாக்குதல் நடத்துவார்கள் என்று பயந்து பக்கத்திலிருந்த சோசலிச காங்கோ நாட்டிற்க்கு அகதியாக சென்றனர்.அங்கேயும் இந்த துட்சி இனமக்களுக்கு எதிராக 1997முதல் 2003 வரை காங்கோ அரசு ருவாண்டா இராணுவத்துடன் சேர்ந்து இனப்படுகொலையை நடத்தியது.ஆனால் இது வெளியில் தெரியவில்லை அப்படியிருக்கும் பொழுது ஒரு மிகப்பெரிய மனித புதைகுழி 2004ல் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு அதன்படி விசாரணை நடைபெறும்போது ஊட்டு மக்களின் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நடந்திருக்கிறது என்ற உண்மையை ஐநா சர்வதேசத்திற்க்கு அறிவிக்கிறது.

ஆனால் அதை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் எனும்போது ஏற்கனவே ருவாண்டா அரசின் மீது விசாரணை நடைபெறுகிறதே அதே விசாரணை ஆணையத்தில் இந்த இனப்படுகொலையும் சேர்ந்து விசாரிக்கவேண்டும் என்ற விவாதம் ஐநாவில் வரும்போது ஐநா மிக தெளிவாக சொன்னது இது ருவாண்டாவில் 1994ல் நடைபெற்ற இனப்படுகொலையை மட்டுமே விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் இதற்க்கு அதை மட்டுமே விசாரிக்க அதிகாரமுள்ளது.வேறு எதையும் விசாரிக்க இதற்க்கு அதிகாரமில்லை இதுதான் ஐநாவின் விதியென்று மறுத்துவிட்டது.

இப்படியாக ஆதாரங்கள் எல்லாம் மிக தெளிவாக இருந்தும் அந்த இனப்படுகொலையை நிகழ்த்திய அதே ஊட்டு இனக்குழுவின் மேல் ஏற்கனவே நடைபெறுகிற ஒரு விசாரணையில் இதையும் சேர்த்து விசாரிக்க முடியாது என்பதுதான் ஐநாவின் விதி.இதில் மேலும் குறிப்பாக ஐநாவில் எந்த ஒரு தீர்மானம் வந்தாலும் அந்த தீர்மானத்தில் இறுதியாக கடைசி வரியில் THIS IS TO REMAIN SEIZE OF MATTER அதாவது இந்த பிரச்சனையை இதற்க்கு மேல் விவாதிக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முடித்திருப்பார்கள்.இதை போனவருடமோ அல்லது அதற்க்கு முந்தைய வருடமோ வந்த ஐநாவின் தீர்மானத்தில் பார்த்தால் தெரியும்.எனவே ஒரு முறை போர்குற்றத்திற்க்கான விசாரணை என்று வந்துவிட்டால் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்தும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நாம் கோரமுடியாது.

எனவே எதாவது ஒன்று முதலில் வரட்டும் என்று நாம் இருந்தால் அது தீர்வை அடையாமல் போகத்தான் வழிவகுக்கும்.நமது ஆசைகள் வேறாகயிருக்கலாம் ஆனால் ஐநாவின் விதி என்ன அது மேற்க்கொண்டு இதை நகர்த்துமா இல்லை இதோடு முடித்து வைத்துவிடுமா என்பதை பாதிக்கப்பட்ட சமூகமாகிய நாம் தான் கவனமாக இருந்து ஆராயவேண்டும்.

இதில் போர்குற்றம் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று ஆரம்பித்து விசாரணை நடந்தால் அது இரண்டு தரப்பில் உள்ள யாரவது ஒருவரை தண்டிப்பதில் முடியும் இல்லையேல் இரண்டு தரப்பும் தவறு செய்திருக்கிறது என்று முடியும் இதுதான் கடந்தகால வரலாறு.

ஆனால் இனப்படுகொலை விசாரணையென்று வந்தால் தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் தனிநாடு அமைத்துக்கொள்ள பொதுவாக்கெடுப்பு என்ற தீர்வை நோக்கி நகரும்.மேலும் இனப்படுகொலை குற்றம் செய்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தண்டிக்கப்படும் சுழலும் வரும்.

இதைதான் கடந்த 2013ஆம் வருடம் டிச 7ம்தேதி முதல் டிச்.10ம் தேதி வரை ஜெர்மனியின் பிரேமன் நகரில் நடைபெற்ற ”நிரந்த மக்கள் தீர்ப்பாயத்தில்” பல்வேறு நாட்டில் நீதிபதிகளாகவும்,சட்ட வல்லுனர்களாகவும் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களாகவும் இருந்தவர்கள் ஈழத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலைதான் அது இன்றும் தொடர்கிறது என்ற பல்வேறு விதமான விசாரணைகளுக்கு பின் தீர்ப்பளித்தது.மேலும் தமிழர்கள் இலங்கையில் தனித்த தேசிய இனம் எனவே சர்வதேச சட்டத்தின்படி அவர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமை(தனிநாட்டுக்கான)பெற்றுக்கொள்ள உரிமையுள்ளவர்கள் என்று திர்ப்பளித்துள்ளனர்.

எனவே நாம் இந்த தீர்ப்பாயத்தின் துணைகொண்டு இனப்படுகொலைக்கான சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் உரக்க சொல்வோம்.நமது போராட்டத்தை அதை நோக்கி நடத்துவோம். தமிழீழத்தை வெல்வோம்.

மே 17 இயக்கம்.