வலிகளே வாழ்வாகிப்போன எம் மக்களின் துயரவாழ்வு நீங்கி ஒரு விடியலின் விடுதலையினை பெற்றுக்கொடுக்கும் அரசியலுக்கான எழுச்சிநாளாக மாற்றியமைக்க ஒன்றினைவோம் மே-18 ல்…

0
673

எதிர்வரும் 18/05/2015 அன்று மாபெரும் எழுச்சிப்பேரணியாக நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வில் மக்கள் நாம் ஒன்றினைந்து பங்கேற்று ஈழத்தில் இறுதிநாளில் எம் மண்ணில் விதையாகிப்போன உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியும் எம் இனத்தின் வலிமிகுந்த வாழ்வின் கண்ணீரைத்துடைக்க மரணித்துப்போன மக்களின் உண்மைக்குரலாக எம் இனத்தின் உரிமைக்குரலாக உணர்வின் குரலாக நியாயத்தின் பார்வையை எம்மைநோக்கி திருப்பும் குரலாக ஒன்றிணைந்து ஓரணியில் சர்வதேச அரங்கில் தமிழ்பேசும் பேசும் மக்களின் ஒட்டுமொத்த உணர்வினை வெளிப்படுதும் விதமாக கூடிநின்று குரல்கொடுப்போம்..

 

MULLIVAAIKAL Flyer Tamil 2உறவுகளே வாருங்கள்!

 

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒழுங்கமைப்பின்கீழ் நடைபெரும் இவ்வெழுச்சிப்பேரணியில் வேறுபாடுகள் களைந்து எம் ஒற்றுமையின் குரலாக ஒன்றினைவோம்

 

தமிழ்மான உணர்வோடு வலிகளின் நினைவுகளைத்தாங்கி மரணித்துப்போன எம் மக்களின் கனவுகளோடும் அவர்களின் வலியினைப்போக்கும் வரலாற்றுக்கடமையோடும் மாபெரும் மாற்றமொன்றினை மண்ணில் நிகழ்த்துவோம் வாரீர்!

 

எம் இனிய சொந்தங்களே கீழே குறிப்பிடப்படும் முகவரியில் ஒன்றுகூடி மாற்றத்தின் பங்காளிகளாக நீங்களும் மாற்றம் பெற உரிமையோடு அழைக்கிறது பிரித்தானிய தமிழர் பேரவை..

 

குறிப்பு;-வர்த்தக சங்கங்கள்,ஆலயங்கள்,தமிழ் பொது அமைப்புக்கள்,விளையாட்டு அமைப்புக்கள், தமிழ்ப்பாடசாலைகள்,ஊர்ச்சங்கங்கள் எம் இனம் சார்பான தங்களின் பிரதிபலிப்புக்களை,பதாதைகளை தாங்கியவாறு பங்கேற்குமாறும் அன்று பாடசாலை தினமாதலால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு விடுப்புக்கடிதம் கொடுத்து எம் உணர்வினை உணர்த்தும்விதமாக அவர்களையும் இப்பேரணியில் பங்குபற்ற வைப்பதன்மூலம் அனைத்துச்சமூகத்திற்கும் ஒரு விழிப்புணர்வையும் எம் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையினையும் தெளிவுபடுத்தலாம் எனவே குறித்த நேரத்தில் தமிழ்த்தேசியத்தின் பெயரால் ஒன்றினையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

 

………தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்…..

 

https://youtu.be/w0aECIUm57I

 

காலம்;- MAY-18-2015

நேரம்;-2 PM