tamilarasanகுற்றம் நிரூபிக்காத அப்பாவிகள் பல ஆண்டுகளாக சிறைகளுக்குள் வாடி வாழ்வை தொலைப்பதும். பணமும் செல்வாக்கும் உள்ளவர்கள் தண்டனை பெற்ற பின்னும் விடுதலையாகி வெளியே உலவுவதும் இந்தியாவில் வழமையானதே.

 

கருத்து சுதந்திரம் இல்லாத மக்களை “பூம் பூம்” மாடுகளாக மட்டுமே வாழ பணிக்கும் நாடு இந்தியா.

 

மனித உரிமைக்காக குரல் கொடுப்பது ஆயுதப் போராட்டத்தை விட கொடுமையானதாக மாபெரும் குற்றமாக இந்தியம் பார்ப்பதனால் தான் தமிழீழ தமிழக தமிழ் மக்களுக்காக வலிமையாக குரல் கொடுத்த காரணத்திற்காக நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக 2 ஆண்டுகளாக மதுரை சிறையில் மதிப்பிற்குரிய தோழர் தமிழரசன் கலை, தோழர் திருச்செல்வம், தோழர் காளை, தோழர் கவியரசு, தோழர் ஜான் மார்டின், தோழர் கார்த்தி ஆகிய தமிழ் மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றிய தோழமைகள் இன்னமும் விசாரணை என்ற பெயரில் மாறி மாறி வரும் நீதிபதிகளின் நீதியற்ற இழுத்தடிப்புகளால் சிறையில் வைத்து வழக்குகளால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

 

குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்ட பின்னும் வேண்டும் என்றே விடுதலையை தள்ளி போட்டு விடுதலை செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள் மாறி மாறி வரும் நீதிபதிகள். எங்கு நீதி அங்கு? அரசு என்ன சொல்கிறதோ அதன் வழியே நீதிபதிகள் நீதியற்ற தீர்ப்புகளும் இழுத்தடிப்புகளும்..

 

இது போல் தான் இந்தியாவில் ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொரு சிறை வாழ்வாளர்கள் வழக்குகளிலும்…
இருப்பவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி இந்திய நீதியில். யாவுமே அநீதியின் வடிவமே!

 

ஊழல் செய்வது, கொள்ளை அடிப்பது, கொலை செய்வது, பாலியல் பலாத்காரம் செய்வது எதுவுமே குற்றம் அல்ல! ஆனால் விடுதலைக்காக குரல் கொடுப்பது எழுதுவது பேசுவது இந்தியாவின் அநீதிகளை தட்டிக் கேட்பது போன்றவை மாபெரும் குற்றங்கள்!

 

• இதுதான் இந்திய (அ)நீதி!

 

அநீதிகளை தட்டிக் கேட்க தவறும் மக்களின் பொறுத்துப் போகும் போராடாத குணத்தால் தான் நீதி மன்றங்களும் காவல் துறையும் அரசுகளும் எழுந்தமானமான கேள்வி கேட்பார் யாரும் இல்லாமல் தொடரும் தவறுகளை செய்கின்றன.

 

தட்டி கேட்கும் மக்கள் வாழும் தேசத்தில் இது போன்ற அநீதிகள் நிகழ வாய்ப்பே இல்லை! எனவே இவற்றுக்கு முடிவு கட்டி நீதியை வாழ வைக்க மக்கள் நமக்கென்ன என இருக்காமல் ஒவ்வொரு அநீதிக்கு எதிராகவும் கட்சி பேதம் இன்றி போராட வேண்டும்.

 

அனைத்து அநீதிகளையும் திருத்தி நீதியை வாழ வைக்க எழுகை கொண்ட மக்களே நீதிபதிகளாகி தீர்பெழுதும் காலங்கள் உருவானால் மட்டுமே முடியும்!

 

செந்தமிழினி பிரபாகரன்