cow-pongalநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் பலனாக கிழக்கு மகாணசபையை கைப்பற்றக்கூடிய வாய்ப்பு அதிக இடங்களை பெற்றிருந்த கூட்டமைப்புக்கு கிட்டியது.

 

ஆனால் குறுக்குவழியில் மக்கள தீர்ப்புக்கு முரணாக மாறி மாறி பல்டி அடித்தே கட்சியை மாற்றி மாற்றி தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் அதைக் கைப்பற்றியது.

 

ஆச்சர்யப்படத்தக்க வகையில் எதற்குமே அடிபணிந்து போகும் கூட்டமைப்பு தலைமை இதற்கு இணங்காது ஆட்சியமைக்க முற்பட்டது.

 

ஆனால் இனஅழிப்பு அரசும் முஸலிம் காங்கிரசும் அதற்கு இடமளிக்க முற்படாதபோது இறங்கிவந்த கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியையாவது தமக்கு வழங்குமாறு கேட்டது..

 

ஆனால் அதற்கும் இடமளிக்கவில்லை முஸ்லிம் காங்கிரஸ்..

 

னவே அதிலிருந்து இறங்கிவந்த கூட்டமைப்பு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் ஒரு தற்காலிக நவடிக்கையாக காணி மற்றும் கல்வி அமைச்சுக்களையாவது தருமாறு கேட்டிருந்தது..

 

ஆனால் இனஅழிப்புக்கு சேவகம் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் இனஅழிப்பு அரசின் ஆலோசனையின் பேரில் காணி மற்றும் நில அதிகாரம் தமிழர்களுக்கு போய்:விட்டால் தமிழர்கள் மீளெழுந்து விடுவார்கள் என்று அதையும் தாமே சுவீகிரித்துகொண்டுவிட்டது. (ஆனால் மகாணசபைகளில் இதற்கான எந்த அதிகாரமும் இல்லை என்பது வேறை கதை.)

 

இது முஸ்லிம் காங்கிரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் மட்டுமல்ல அப்பட்டமான இனஅழிப்புக்கு சேவகம் செய்யும் செயல்களில் இதுவும் ஒன்று.

 

தமிழர் முஸ்லிம் உறவுகளை பலப்படுத்தி சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவையுள்ள இக்கட்டான இத்தருணத்தில் தமிழ் முஸலிம் பகைமையை பேணும் இனஅழிப்பு தந்திரம் இதுவாகும்.

 

முஸ்லிம் அரசியல்வாதிகளின் இத்தகயை சந்தர்ப்பவாத _ பிîழைப்பு அரசியலில் இதனூடாக தமிழர்: – முஸ்லிம் உறவுகள் நிரந்தரமாகவே முடிவுக்கு வரும் அபாயம் இருக்கிறது.

 

ஏற்கனவே ஐநா மனித உரிமை பேரவையின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு பெரும் தடங்கலாக இருக்கும் முஸ்லிம் தலைமைகள் இனஅழிப்பு அரசுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக பொய்யான தகவல்களை சேகரித்து அனுப்பியிருக்கின்றன.

 

அத்துடன் பல முஸ்லிம் அமைப்புக்களை தூண்டிவிட்டு வடக்கு மகாணசபையில் முஸ்லிம்களை தமிழர்கள் இனஅழிப்பு செய்தார்கள்என்று தீர்மானம் நிறைவேற்ற இனஅழிப்பு அரசு முயன்று வருகிறது.

 

அனைத்துலக மட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒரு சிறு எழுச்சியை பெற்றாலே அதை முஸ்லிம் தலைவர்களை கொண்டு மழுங்கடிக்கலாம் என்ற இனஅழிப்பு கணக்கு இது.

 

வடக்கு மகாணசபையில் பெரும் இழுத்தடிப்புக்கு மத்தியில் இனஅழிப்புதீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மறுத்தான் அடிக்கிற வேலை இது. முஸ்லிம் தலைமைகள் இதற்கு உடந்தையாக இருப்பது வேதனை.

 

கடும் தீவிர போக்கில்லாத முஸ்லிம்களின் எந்த கோரிக்கைக்கும் செவிமடுக்கக்கூடிய தமிழத்தேசிய கூட்டமைப்புடன் பேசி முஸ்லிம் மக்களின் நலனை பேணக்கூடிய நிலைமையே காணப்படுகிறது.

 

ஆனாலும் மத்தியிலும் முக்கிய அமைச்சு பொறுப்புக்களை பெற்றுள்ள முஸ்லிம் தலைமைகள் கிழக்கு மகாணசபையிலும் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றி தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமையை பறிப்பதென்பது அப்பட்டமான இனவழிப்பு சேவகமாகும்..

 

முஸ்லிம் தலைமைகள் இனியாவது இத்தகைய சநதர்ப்பவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்.. அல்லது முஸ்லிம் மக்களாவது சிந்திக்க வேண்டும்.

 

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி கிழக்கு மகாணசபையில் கால்நடை அமைச்சு மட்டும் கூட்டமைப்புக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.. ( இல்லை அதையும் வழங்காமல் வீட்டுக்கு அனுப்புகிறார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.)

 

இதை நாம் ஒரு குறியீட்டு நிகழ்வாக எடுத்துகொள்ளலாம் என நினைக்கிறோம்..

 

இந்த அமைச்சை வழங்குவதனூடாக தமிழர்களை மந்தைகள், மாடு மேய்க்கத்தான் தகுதியானவர்கள் என்று சொல்கிறார்களா?

 

ஒருவகையில் பார்த்தால் ஐக்கிய இலங்கைக்குள் இணக்க அரசியல் செய்ய புகுந்த கூட்டமைப்புக்கு இது பொருத்தமான அமைச்சு பதவிதான்..

 

 

வாங்க எல்லோரும் மாடு மேய்ப்போம்..

 

 

ஈழம்ஈநியூஸ்.