viki-northமுதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு இன்று பிறந்த நாள் என்று வாழ்த்துக்கள் குவிகின்றன.

 

இதில் குறிப்பான விடயம் என்னவென்றால் விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேசமும் அவர் அதை அடுத்து நடந்து கொண்ட முறைமையும் பேசிய பேச்சுக்களும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளும் பலருக்கு பேரதிர்ச்சி

 

குறிப்பாக தமிழக பேராட்டங்களை குறித்து அவர் தெளிவான புரிதலின்றி பேசியது பெரும் சினத்தை களம் புலம், தமிழகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது.

 

இனக்கொலையாளி மகிந்த முன்னிலையில் பதவியேற்பு சர்ச்சை, கமருன் வருகையின் போது நடந்து கொண்ட முறைமை என்று அவர் மீது நம்பிக்கை கொள்ளும் அறிகுறி எதனையும் அவர் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை.

 

விளைவாக அவரை திட்டித் தீர்க்காதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒரு எதிர்ப்பு அலை உருவாகியது. இதை எழுதிக்கொண்டிருக்கும் நாங்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை.

 

ஆனால் இன்று அவரை திட்டியவர்களே பாராட்டுமளவிற்கு தன்னை மாற்றியமைத்திருக்கிறார் விக்கினேஸ்வரன். தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு அரசியல்வாதியாக தன்னை சரிசெய்திருக்கிறார்.

 

தான் மக்களின் பிரச்சிளையை தெரியாமல் அரசியலுக்கு வந்து , தன்னை சிலர் தவறான அரசியல் பாதைக்கு வழிகாட்டியதாகவும் ஆனால் தன்னை தினமும் சந்திக்கும் மக்கள் தான் என்ன மாதிரியான அரசியல் சேவகனாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருப்பதாகவும். சொல்வது மட்டுமல்ல அதை நடைமுறையில் செய்தும் காட்டியிருக்கிறார்.

 

யாரும் செய்ய முடியாத மாற்றத்தை மக்கள் செய்ததற்கு இது ஒரு சான்று என்று கூட இந்த மாற்றத்தை குறிப்பிடலாம்.

 

அவரே இதை தற்போது நேரில் பேசுபவர்களிடமும், நிகழ்வுகளிலும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்.

 

சம்பந்தன் சுமந்திரன் கூட்டணியுடன் இணைத்து “மும்மூர்த்தி” என்று திட்டி தீர்க்கப்பட்டவர் விரைவாகவே அதிலிருந்து விடுபட்டு தன்னை தனித்துவமான ஆளுமையாக அடையாளம் காட்டியிருக்கிறார்.

 

அவர் தவறு செய்யும் நேரம் திட்டிய நாம் அவர் தன்னை சரிசெய்து தமிழ் மக்களின் வழிகாட்டியாக தன்னை மாற்றியமைத்தமையை பாராட்டவும் வரவேற்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

 

இந்த நாளில் அதைச் சொல்வது பொருத்தமானத மட்டுமல்ல அர்த்தம் நிறைந்ததும்கூட..

 

ஈழம்ஈநியூஸ்