இன்று 26-08-14 லண்டன் சென்.ஜோர்ஜ்ஸ் வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக மரணத்தை தழுவிக்கொண்டார்.இவர் லண்டனில் பிரபல சட்டதரணியாக திகழ்ந்தார்.தமிழ் சமுதாய பணிகளில்முன்நின்று சேவையாற்றினார்.

devaraja-PFLT
தாயகத்தில் விடுதலைப்போராட்டம் முகி்ழ்விட்ட காலங்களில் தன்னை தமிழ் தேசிய விடுதலைக்காக இணைத்துக்கொண்டார்.யாழ் பல்கலைகழகத்தில் கடமையாற்றும் போது தேசவிரோத குழுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு,இந்திய இராணுவத்தினால் மிகவும் மோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

பிரிட்டன் வந்த பின்பும் தனது தேசியகடமையை செய்து கொண்டே இருந்தார்.தனது உழைப்பின் பெரும் பகுதியை அகதிகளுக்கும், தாயகத்தில் இன்னலுறும் மக்களுக்கும் செலவு செய்தார்.அவரின் இழப்பு ஈழத்தமிழரகளுக்கு பெரும் இழப்பாகும்.

அன்னாரின் இறிதி கிரியை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நன்றி: வெளிச்சவீடு.