ஊற்றுப் புலம் கிராமமும் வித்தியாவும்

கிளிநொச்சியில் இருந்து தொலை தூரத்தில் உள்ள கிராமம் ஊற்றுப் புலம். இங்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் மனிதர்கள் வாழ்கிறார்கள்.. பல வீடுகளில் கிணறு‚ மலசல கூடம் இல்லை. மின்சார வசதி இல்லை. அவசர தேவையின் பொருட்டு கிராமத்திலிருந்து கிளிநொச்சிக்கு வருவதற்கு ரூபா 1000 முச்சக்கரவண்டிக்கு கொடுக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டு பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கிய மக்களே இங்கு வசிக்கின்றனர்.

vidya
வித்தியாவிற்கு 23 வயது. 2 குழந்தைகள் . கார்திகேயன் 4 வயது . பவித்திரா ஒரு வயது 6 மாதம். கணவன் சத்தியநாதன் வலது கை செயலிழந்த நிலையிலும் வலது கால் முறிந்த நிலையிலும் உள்ளார். வாழ்வாதாரம் ஏதுமே இல்லை.
23.6.14 இல் ஏற்பட்ட விபத்தொன்றில் வித்தியாவின் கால் முறிவடைந்ததால் 3 மாதங்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளார்.

நேற்றிரவு முழுவதும் 4.8.14 வித்தியாவின் ஒன்றரை வயதுக் குழந்தை அழுத வண்ணம் இருந்தது. பால்மா இல்லை. 4 வயது கார்திகேயனும் பசியினால் துவண்டு போயுள்ளான்.

இந்தக் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் உதவுமாறு கருணையுள்ளங்களிடம் வேண்டுகிறேன்.

வித்தியாவின் கணவனிற்கு ஒரு துவிச்சக்கரவண்டி பெற்றுக் கொடுத்து வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வன்னியல் பல குழந்தைகளின் நிலை இதுதான். வட மகாணசபையின் பிரதிநிதிகள் போருக்குப்பின்னர் மக்களின் புள்ளிவிபரங்களையாவது திரட்டி போரினால் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வாதரத்திற்காவது வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். தங்களது சொகுசு வாகனங்கைளை ஏலத்தில் விற்றுவிட்டு வன்னியிலும் வடகிழக்கிலும் உள்ள மக்களுக்கு மலசல கூடம் கட்டிக் கொடுத்திருக்கலாம்.