இறுதிவரை நேரடியாக பிடிக்க முடியாத வீரப்பனாரை நம்ப வைத்து கழுத்தருக்க ஆளை தேர்ந்தெடுத்து அனுப்பி, மோரில் நஞ்சு கொடுத்து கதை முடித்த, விஜய குமாரை வீரனாக பார்க்க கூடாது !

 

விஜயகுமாரை தேர்ந்தெடுத்து அனுப்பிய ஜெயலலிதாவின் வன்மத்தை ராஜபக்சேவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

 

அதை விட்டு துரோகம் செய்து வெற்றி கண்ட விஜயகுமாரை பெரிய வீரராக மதிப்பதும் வீரப்பனாரையும் வீரனாக ஏற்பதும் முரண்.

 

தமிழன் ஒருவன் வீரனாக இருக்க கூடாது ,அவன் கன்னடருக்கு எதிராக செயல்படுகிறான் ,தமிழ் தேசியம் பேசுகிறான் நம் ஆட்சி காலத்திலேயே அவனை கொன்று ஒழிக்கிறேன் பார் என செயல்பட்டவர் ஜெயலலிதா! மலையாளி விஜயகுமாரை துணைக்கழைத்துகொண்டு வீரப்பனார அவர்களை கொன்ற ஜெயலலிதாவை தலைவியாக ஏற்றவர்கள் வீரப்பனாரை போற்றுவதும் ஒரு முரண் .

 

விஜயக்குமாரை வீரனாக ஏற்காதவர்கள் ஜெயலலிதாவை தலைவியாக ஏற்காதவர்கள் மட்டும் வீரப்பனை கொண்டாடுங்கள் !
ஐயா வீரப்பனார் அவர்களை நினைவு கொள்ளுங்கள்!
தமிழர் முன்னேற்ற கழகம் வீரப்பன் அவர்கள் செய்த தொழிலை ஏற்றதில்லை அதேநேரம் வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறப்பதும் இல்லை.

 

நாங்கள் அடுத்த தலைமுறையை ஒரு நல்ல தலைமுறையாக உருவாக்க நினைப்பவர்கள் !வீரப்பனாரிடம் இந்த இனத்திற்கு தேவையான வீரத்தை எடுத்துக் கொள்கிறோம், தமிழ் தேசிய சிந்தனையை எடுத்துக் கொள்கிறோம் அதனை அகமகிழ்ந்து பாராட்டுகிறோம்.

 

அவர் தமிழன் என்பதால் ஜெயலலிதா என்னும் தமிழின எதிரியால் துரோகம் செய்து கொல்லப்பட்டார் என்பதை தமிழ் சமூகத்திற்கு நாங்கள் தொடர்ந்து எடுத்துக் கூறுவோம்.

 

வீரப்பனாரின் வீரம் ஜெய லலிதாவின் எதிரி தனத்தையும் விஜயகுமாரின் துரோகத்தையும் எம் தமிழ் சமூகத்துக்கு நினைவுகூரும் நாளாக இருந்து கொண்டே இருக்கும்.

 

க அதியமான் பொதுச் செயலாளர், தமிழர் முன்னேற்றக் கழகம்.