elilan-wifeஇன்று அதிகாலை 12.20 (20-09-2013) மணியளவில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீது சிங்கள இராணுவம் மற்றும் EPDP ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள். இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும்.

திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் ஒரு பெண் என்றும் பார்க்காமல் இப்படியான தாக்குதல் நடபெற்றமையானது, வடகிழக்கில் போரினால் கணவரை இழந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், 50ஆயிரம் அநாதையாகிப்போன பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

இச்சம்பவங்கள் மூலம் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. அது என்னவெனில் தேர்தல் மூலம் சிறிலங்காவில் நல்லிணக்கமும், சமாதனமும் ஏற்படும் என்று நினைப்பவர்களுக்கு எப்பவுமே தமிழனும் சிங்களவனும் ஒன்றாக வாழ முடியாது என்பதையும், அப்படி வாழ்ந்தால் தமிழன் சிங்களவனுக்கு அடிமையாக மட்டுமே வாழமுடியும் என்பதையும், உரிமைக்கு குரல் கொடுத்தால் இது தான்விளைவு என்பததை தமிழருக்கும் ஏன் சர்வதேசத்துக்கும் சொல்லாமல் செல்லியுள்ளது சிங்கள அரசு.

எனவே எனியும் இலங்கையில் ஜனநாயகம் மலரும், உரிமைகளை சிங்கள அரசாங்கம் தமிழருக்கு உரிமையை பகிர்ந்து கொடுக்கும் என்ற எண்ணத்தினை கைவிட்டு அமெரிக்க உடனடியாக நேரடியாக ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும். விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஒருவகையில் சிங்கள அரசாங்கத்திற்கு உதவிய அமெரிக்கா, புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவர்களை உடனடியாக காப்பாற்றுமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.

அனந்தியின் வீட்டில் இராணுவம் வெறியாட்டம்: 8 பேர் படுகாயம்!

தொல்புரத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தியின் வீட்டினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தினர் உட்புகுந்து நடாத்திய தாக்கியதில் பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தியின் வீட்டை நடுநிசியில் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் சுற்றி வளைத்ததாக அனந்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈபிடிபியினரும் இராணுவத்திரும் தனது வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இதை அறிந்து ஆதரவாளர்களும் நண்பர்களும் அயலவர்களும் விரைந்து வந்ததும் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

விடயம் அறிந்து வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி விட்டில் இருந்து வெளியேற்றி வேறு இடத்திற்கு அனுப்பிய சில நிமிடங்களில் அங்கு மீண்டும் வந்த 40க்கு மேற்பட்ட படையினரும் ஈபிடிபி ஆயுததாரிகளும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு 8க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சில ஆதரவாளர்களுக்கு தலை உடைக்கப்பட்டு, கால் கைகள் முறிந்த நிலையில் இருப்பதாகவும் ஆபத்தான நிலை தொடர்வதாகவும் தெரிவித்த அனந்தி, இந்த தாக்குதலில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே வேளை இத் தாக்குதலில் கபே அமைப்பின் யாழ் மாவட்ட கண்காணிப்பாளரும் மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான சுபாஸ் உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளனர்.

இலங்கை நேரம் அதிகாலை 2.:10மணியளவில் சம்பவ இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், யாழ்மாவட்ட தேர்தல் ஆணையாளர் அச்சுதன் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும், ஊடகவியலாளர்களும் ஸ்தலத்தில் இருப்பதாக அனந்தி உறுதிப்படுத்தினார்.

மேலும் விடிவதற்குள் என்ன நடக்குமோ என அச்சத்துடன் இருப்பதாகவும் அனந்தி தெரிவித்தார்.